சர்ச்சைக்கு உள்ளான கோல்
சர்ச்சைக்கு உள்ளான கோல்pt web

“இந்திய கால்பந்து அணியின் கனவையே சிதைத்துவிட்டது” - பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேதனை

கத்தாருக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் நடுவர் அளித்த தவறான தீர்ப்பு குறித்து போட்டி ஆணையரிடம் இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையிட்டுள்ளது.
Published on

2026ஆம் ஆண்டு நடைபெற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்காக பல்வேறு நாட்டு அணிகளுக்கு இடையே தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கத்தாருடன் இந்தியா நேற்று விளையாடியது. இந்திய அணி ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றாலும் கத்தார் அடுத்து 2 கோல்களை போட்டு வெற்றிபெற்றது. ஆனால் கத்தாரின் 2ஆவது கோல் விதிமுறைகளுக்கு மாறாக இருந்தது தெளிவாக தெரிந்தது.

சர்ச்சைக்கு உள்ளான கோல்
குவைத்: தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு.. தமிழர்களின் நிலை என்ன?

கத்தார் வீரர் கோல் போட்டதாக நடுவர் கூறியதால் ஆட்டத்தில் இந்தியா தோற்க நேர்ந்தது. இந்த கோல் அளிக்கப்பட்டிருக்காவிட்டால் போட்டி சமனில் முடிந்து இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலை இருந்தது. மேலும் முதல்முறையாக 3ஆம் தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.

இந்நிலையில் தென் கொரிய நடுவர் அளித்த தவறான முடிவு குறித்து விரிவாக விசாரிக்க கோரி போட்டி ஆணையரிடம் இந்தியா முறையிட்டுள்ளது. தவறான ஒரு முடிவு இந்திய கால்பந்து அணியின் கனவையே சிதைத்துவிட்டதாக பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் வேதனை தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்கு உள்ளான கோல்
நீட் தேர்வு முறைகேடு: 23 மாணவர்களுக்கு தேர்வில் பங்கேற்க தடை.. தேசிய தேர்வு முகமை கொடுத்த விளக்கம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com