AFG Vs NZ| 26 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட்.. என்ன காரணம்?

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துகூட வீசாத நிலையில், கைவிடப்பட்டு இருக்கிறது.
நொய்டா மைதானம்
நொய்டா மைதானம்எக்ஸ் தளம்
Published on

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு டெஸ்ட் போட்டியில் மோத இருந்தன. இந்தப் போட்டியை இந்திய மண்ணில் நடத்திக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில் டெஹ்ராடூன், கான்பூர் மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய மைதானங்களை வழங்கியிருந்தது. இதில், ஆப்கானிஸ்தான் கிரேட்டர் நொய்டாவை தேர்வு செய்தது.

அதன்படி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி, தொடங்கி செப். 13ஆம் தேதி (இன்று) முடிவடைதாக அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெல்லி என்சிஆர் பகுதியில் பெய்த கனமழையால் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அணிகள் களம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அடுத்த நாள் மைதானத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருந்ததால், அதைச் சுத்தப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

குறிப்பாக, இந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் சரியாக அமைக்கப்படாததால் தகுதியற்ற மைதானம் என நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மோசமான வசதிகள், சீரற்ற வானிலை ஆகியவற்றுடன் மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்கள் மழை பெய்தது. இப்படி, முதல் நான்கு நாட்கள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டமும் இன்று கைவிடப்படது.

இதையும் படிக்க: பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு.. பொருளாதார நெருக்கடி குறையுமா?

நொய்டா மைதானம்
சச்சின்கூட லிஸ்ட்ல இல்லை! 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை; ஆலி போப் படைத்த புதிய சாதனை!

மைதானத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கி இருந்ததுடன், போட்டி நேரத்திலும் மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், எப்படியும் இந்த மைதானத்தை தயார் செய்ய முடியாது என்ற நிலையில் நடுவர்கள் ஐந்தாம் நாள் ஆட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தனர். இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில், ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில், போட்டி கைவிடப்படுவது இது எட்டாவது நிகழ்வாகும்.

இதற்குமுன்பு 1890, 1938 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. அந்த அணிகள் மட்டுமே இதுபோன்ற நிகழ்வை 3 முறை சந்தித்துள்ளன. அடுத்து, 1980இல் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், 1990இல் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளும், 1998இல் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளும், இறுதியாக அதே ஆண்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும். இதேபோன்று நிகழ்வைச் சந்தித்துள்ளன.

இவை எல்லாம் வெளிநாட்டு மைதானங்களில் கைவிடப்பட்ட போட்டிகளாகும். ஆனால், தற்போது கைவிடப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கான போட்டி இந்திய மண்ணில் நடைபெற்றதாகும். ஆப்கானிஸ்தான் அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. அந்த வகையில், இந்தப் போட்டியும் கைவிடப்பட்டதால், ஆப்கானிஸ்தான் அணி வருத்தத்தில் உள்ளது. அடுத்த வாரம் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லவிருக்கிறது.

இதையும் படிக்க:சீனா | அலுவலகத்தில் முத்தம்.. ஆக்‌ஷன் எடுத்த நிர்வாகம்.. வழக்கு தொடுத்த ஜோடிக்கு நீதிமன்றம் கொட்டு!

நொய்டா மைதானம்
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்: அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை படைத்த ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com