த்ரில்லாக 'டை'யில் முடிவடைந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி !

த்ரில்லாக 'டை'யில் முடிவடைந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி !
த்ரில்லாக 'டை'யில் முடிவடைந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி !
Published on

ஆசியக் கோப்பை 2018 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றதால், ரோகித் ஷர்மா, புவனேஷ் குமார், பும்ரா, ஷிகர் தவான் மற்றும் சாஹல் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று தோனி கேப்டனாக அணியை வழி நடத்தினார்.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷசாத் 124 (116) ரன்களை குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 6 விக்கெட்டிற்குப் பிறகு வந்த நபி 64 (56) ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த நஜிபுல்லா 20 (20),  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 252 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டி ஸ்டார் சேனல் குரூப்பின் அதிகாரப்பூர்வ செயலியான ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பட்டது. இதனை ஒரே நேரத்தில் 32 லட்சம் பேர் பார்த்தனர்.

இதனையடுத்து இந்தியா 253 என்ற இலக்கை சேஸ் செய்ய களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடிய நிலையிவ் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தனர். தலா 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்த ராயுடுவும், 60 ரன்களுடன் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்து வெளியறினர். அவர்களைத் தொடர்ந்து தோனி, மணிஷ் பாண்டே 8 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் எடுத்து வெளியேறினர். 

அவருக்கு பின் வந்த கேதர் ஜாதவ் 19 , தீபக் சஹார் 12 , குல்தீப் யாதவ் 9 ரன்களிலும், சித்தார்த் கவுல் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இந்தியாவும் 252 ரன்கள் எடுத்திருந்த பரபரப்பான சூழ்நிலையில் 2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜடேஜா அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் நஜிபுல்லா. ஜடேஜா 25 ரன்கள் எடுத்திருந்தார். 49.5 ஓவர்களில் 252 ரன்களுடன் இந்தியா ஆல் அவுட்டானது. ஆப்கன் தரப்பில் அப்தாப் ஆலம், நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இந்திய அணிக்கு பொறுப்பேற்ற மகேந்திர சிங் தோனி தனது 200 ஆவது ஒரு நாள் போட்டி வரலாற்று சிறப்புமிக்க "டை"யில் முடிவடைந்தது, அவரின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசியக் கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தின் இன்று பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப்பெறும் அணி 28 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவுடன் மோதும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com