''இனவெறியை பொறுத்துக்கொள்ள முடியாது; நடவடிக்கை பாயும்'' : ஆஸி., கிரிக்கெட் வாரியம்

''இனவெறியை பொறுத்துக்கொள்ள முடியாது; நடவடிக்கை பாயும்'' : ஆஸி., கிரிக்கெட் வாரியம்
''இனவெறியை பொறுத்துக்கொள்ள முடியாது; நடவடிக்கை பாயும்'' : ஆஸி., கிரிக்கெட் வாரியம்
Published on

இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்கள் முகம்மது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டியின் 4 வது நாளான இன்றும் சில ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால், கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடங்கள் முகமது சிராஜ் பந்து வீசுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்தனர். 

முகமது சிராஜை நிற வெறியை ஏற்படுத்தும் நோக்கில் மூன்றாம் நாளான நேற்றும் இந்த சீண்டல் நடந்துள்ளது. சிராஜை திட்டியவர்கள் மது குடித்து இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. சிராஜ் நிற வெறிக்கு ஆளானதை அறிந்த சீனியர் வீரர்களும், அணியின் கேப்டன் ரஹானேவும் களத்தில் நின்ற நடுவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் இனவெறி புகாருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. அதில், ''இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி. இனவெறியை ஆதரிப்பவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது. இந்திய கிரிக்கெட் அணி நண்பர்களிடம் நாங்கள் வருத்தங்களை பதிவு செய்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறோம்'' என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com