இவரது குறி தவறுவதில்லை...சாதிக்கும் தமிழக மாற்றுத் திறனாளி வீராங்கனை

இவரது குறி தவறுவதில்லை...சாதிக்கும் தமிழக மாற்றுத் திறனாளி வீராங்கனை
இவரது குறி தவறுவதில்லை...சாதிக்கும் தமிழக மாற்றுத் திறனாளி வீராங்கனை
Published on

தமிழக அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் மாற்று திறனாளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் எழிலரசி. ‌தேசிய அளவிலான போட்டியிலும் கால்பதித்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரின் கண்கள் மிளிர்கின்றன.

காலை 6 மணிக்கெல்லாம் தனது காரை ஒட்டிக்கொண்டு பயிற்சிக்கு கம்பீரமாக வந்திறங்குகிறார் எழிலரசி. இவரின் துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டாக்கள் அனைத்தும் மைய புள்ளியை சரியாக துளைக்கின்றன. அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக அளவிலான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இவர், தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க உள்ள முதல் தமிழக மாற்று திறனாளி வீராங்கனை என்ற பெருமையும் பெறவுள்ளார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் துணை ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே வெறும் மூன்று மாத பயிற்சியில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது.

எந்த ஒரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட சிறந்த ஆசான் தேவை. அந்த வகையில் அவரது பயிற்சியாளர் உதயகுமார் தந்த ஊக்கமே எழிலரசிக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பயிற்சியாளர் உதயக்குமார் கூறும்போது, மாற்று திறனாளி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால், தங்கம் குவிக்கத் தயாராக இருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் உச்சபட்சக் கனவான ஒலிம்பிக் போட்டியையே தனது இலக்காக தோளில் சுமந்து நிற்கும் எழிலரசி இந்தியாவுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com