காந்த குரலால் கிரிக்கெட் வர்ணனையை தமிழில் அறிமுகம் செய்த அப்துல் ஜப்பார் காலமானார்

காந்த குரலால் கிரிக்கெட் வர்ணனையை தமிழில் அறிமுகம் செய்த அப்துல் ஜப்பார் காலமானார்
காந்த குரலால் கிரிக்கெட் வர்ணனையை தமிழில் அறிமுகம் செய்த அப்துல் ஜப்பார் காலமானார்
Published on

கடந்த 1980 களில் தனது காந்தக் குரலினால் தமிழ் மொழியில் கிரிக்கெட் விளையாட்டை வர்ணனனை செய்த பிரபல வரணனையாளர் அப்துல் ஜப்பார் உடல்நலக் குறைவினால் காலமானார். அவருக்கு வயது 81. 

சாத்தன்குளத்தில் கடந்த 1939 இல் பிறந்த அவர் சிறு வயது முதலே வானொலியில் ஒலிபரப்பாகின்ற நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த ஆர்வம் நாளடைவில் நிகழ்ச்சிகள் குறித்த கடிதத்தை எழுதவும் தூண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த கடிதத்தின் மூலமாக தமிழ்நாடு - கேரளா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பைக்கான போட்டியை வர்ணனனை செய்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. அந்த வாய்ப்பின் மூலம் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் விளையாட்டு வர்ணனையாளராக மாறினார் அப்துல் ஜப்பார். 

டெஸ்ட், ஒருநாள் என கடந்த 2004 வரை வர்ணனையாளராக செயல்பட்ட அவர் அதன் பிறகு ESPN, ஐபிசி மாதிரியான சர்வதேச ஊடக நிறுவனத்தில் கிரிக்கெட் போட்டிகளை அவர் வர்ணனனை செய்துள்ளார். 

அவரது மறைவுக்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டரில், “வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான  சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி” என்று குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com