ஏன் இருக்கக்கூடாது?-”SKY” உடனான 360° ஒப்பீடுகளுக்கு ஏபி டி வில்லியர்ஸ் ஒப்புதல்!

ஏன் இருக்கக்கூடாது?-”SKY” உடனான 360° ஒப்பீடுகளுக்கு ஏபி டி வில்லியர்ஸ் ஒப்புதல்!
ஏன் இருக்கக்கூடாது?-”SKY” உடனான 360° ஒப்பீடுகளுக்கு ஏபி டி வில்லியர்ஸ் ஒப்புதல்!
Published on

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவை “புதிய மிஸ்டர் 360° பேட்டர்” என்று தன்னுடன் ஒப்பிட்டு வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ்.

ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை அவரால் இதை தொடர்ந்து செய்ய முடிந்தால், கிரிக்கெட் வீரர்களின் தங்கப் புத்தகத்தில் இடம்பிடிப்பார் என்று சூரியகுமார் யாதவை புகழ்ந்துள்ளார் டி வில்லியர்ஸ்.

கடந்த சில மாதங்களாக, சூரியகுமார் யாதவ் தனது 360 டிகிரி ஆட்டத்திற்காக ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். அந்த ஒப்பீடுகளுக்கு எல்லாம் டிவில்லியர்ஸ் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "ஆம், அவர்கள் என்னுடன் சூர்யகுமாரை ஒப்பிட்டுப் பார்ப்பது சரிதான். அவர் இனி கவனம் செலுத்த வேண்டிய ஒரே விஷயம் அவரது பார்மை தொடர்ந்து அப்படியே நிலைத்திருக்க வைப்பது தான். அவர் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் இதைச் செய்ய வேண்டும், அதற்கு பின்னர் அவர் கிரிக்கெட் வீரர்களின் தங்க புத்தகங்களில் இடம் பிடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ”எந்த வீரரும் அவர்களது உச்சக்கட்ட பார்மில் சிறப்பாகவே செயல்படுவார்கள். அப்படி ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவதை பார்ப்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. சூர்யா இப்போது விளையாடும் விதத்தை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறினார்.

ஜிம்பாப்வே உடனான ஆட்டத்தில் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசிய சூரியகுமார் யாதவ், இடது கை வேகப்பந்துவீச்சாளரான இங்கரவா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை ஸ்கூப் செய்து ஸ்கொயர் லெக்கில் தூக்கி சிக்ஸ் அடித்தார். அதனை வர்ணித்த இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் “ புதிய மிஸ்டர் 360°” என்று கூறியதோடு, அனைத்து விதமான ஷாட்களையும் சூரியா தனது புத்தகத்தில் வைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.

முன்னதாக சூரியகுமாரின் பேட்டிங்க் குறித்து பேசியிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், “ சூரியகுமாரின் 360° பர்பார்மன்ஸ் டிவில்லியர்ஸை ஞாபகப்படுத்துகிறது. லாப் ஷாட், லேட் கட், பந்துகளை கீப்பர் தலைக்கு பின்னால் அடிப்பது, ஸ்டிராங்க் லெக் சைட், டீப் பேக்வர்டு ஸ்கொயர் என அவரால் கிரவுண்டின் அனைத்து பக்கமும் அடிக்க முடிகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமில்லாமல் ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுகிறார்” என்று புகழ்ந்திருந்தார்.

டிவில்லியர்ஸ் உடன் தன்னை ஒப்பிடுவதை பற்றி பேசியிருக்கும் சூரியகுமார் யாதவ், “ உலகத்தில் ஒரே ஒரு 360° பிளேயர் தான். நான் எனது விளையாட்டை மட்டுமே சிறப்பாக விளையாட முயற்சி செய்கிறேன். முடிந்த வரை களத்தில் நின்று என்னுடைய ஏரியாவில் பந்துகளை அடிக்க நினைக்கிறேன். நெட் பிராக்டிஸ் சிறப்பாக செய்வதால் என்னால் அழுத்தம் இல்லாமல் விளையாட முடிகிறது. பீல்டிங் மற்றும் பந்துவீச்சாளர்கள் எங்கு வீசப்போகிறார்கள் என்பதில் மட்டும் தான் நான் ஆடுகளத்தில் முழு கவனம் செலுத்துகிறேன். வேறு எதுவும் நான் புதிதாக செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com