ஆரோன் பின்ச் சாதனை விளாசல்: பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி!

ஆரோன் பின்ச் சாதனை விளாசல்: பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி!
ஆரோன் பின்ச் சாதனை விளாசல்: பாகிஸ்தானை பந்தாடியது ஆஸி!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகி றது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் அபார சதம் அடித்தார்.

இரண்டாவது ஒரு நாள் போட்டி, சார்ஜாவில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்தது. விக்கெட் கீப் பர் முகமது ரிஸ்வான் அபார சதம் அடித்தார். அவர் 115 ரன் எடுத்தார். கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன் எடுத்தார். ஆஸ்திரே லிய தரப்பில் ரிச்சர்ட்சன் , கோல்டர் நைல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

(முகமது ரிஸ்வான்)

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜாவும் கேப்டன் ஆரோன் பின்சும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 209 ரன் சேர்த்தனர். கவாஜா 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச், அபார சதம் அடித்தார். இது அவருக்கு 13 வது சதம். அவர் 153 ரன் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிகப்பட்சம் இதுவாகும். 

தொடர்ந்து ஒரு ஒருநாள் போட்டியில் சதம் அடித்து பின்ச் அசத்தியுள்ளார். அதோடு, சர்வதேச டி-20 (172 மற்றும் 156 ரன்கள்) மற்றும் ஒருநாள் போட்டிகளில் (153) என இரண்டு வித கிரிக்கெட்டிலும் 150 ரன்களுக்கு மேல் பதிவு செய்த முதல் வீரர் என்ற புது சாதனையையும் படைத்துள்ளார் பின்ச். 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com