ஆப்கானிஸ்தானுக்கு நாளை முதல் டெஸ்ட் ! ரஹானேவுக்கு ஆசிட் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு நாளை முதல் டெஸ்ட் ! ரஹானேவுக்கு ஆசிட் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு நாளை முதல் டெஸ்ட் ! ரஹானேவுக்கு ஆசிட் டெஸ்ட்
Published on

ஆப்கானிஸ்தான் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக நாளை பெங்களூரில் விளையாடுகிறது. சின்னசாமி மைதானத்தில் நாளை தொடங்கவுள்ள போட்டியில் இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக செயல்படுவார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஐசிசி அண்மையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை வழங்கியது. அதன்படி அயர்லாந்து அணி பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதனையடுத்து, ஆஃப்கன் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி அண்மையில் வங்கதேசத்துடனான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரை வென்று உத்வேகத்துடன் களமிறங்குகிறது. இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய ரஷித் கான் மற்றும் முஜீப் ரஹ்மான் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட உள்ளனர். அதேபோல், இந்திய அணியில் கோலி இல்லை என்றாலும் செம்ம வெயிட்டாக இருக்கிறது டெஸ்ட் அணி. 

கோலி இல்லாததால் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரஹானே மீதுதான் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. ஐபிஎல் தொடரிலும் சரி அதற்கு முன்பாக தென்னாப்பிரி்க்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே பெரியளவில் சோபிக்கவில்லை. எனவே, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற வேண்டும் என்பதே ரஹானேவின் எண்ணம். ஆப்கானிஸ்தானுக்கு தனது முதல் டெஸ்ட் போட்டியில் வென்றே தீர வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் அக்ஸர் ஸ்டானிக்சாயின் ஆசை. ரஹானேவா ? ஸ்டானிக்சாயா ? விரைவில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com