சத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..!

சத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..!
சத்தமில்லாமல் ரிஷப் செய்த சாதனை..!
Published on

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி போராடி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடியான சதத்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்றே நினைக்க தோன்றியது. ஆனால், அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி தோற்றது. 

இந்திய அணி கடைசிப் போட்டியில் தோற்ற போதும் பல்வேறு முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றிருந்தது. அறிமுக வீரராக களமிறங்கிய விஹாரி பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை செலுத்தினார். கடைசி போட்டியில் அஸ்வினுக்குப் பதிலாக களமிறங்கிய ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

அதேபோல், 5வது போட்டியின் 4வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சேவாக்கை போல் அதிரடியாக விளையாடி அவர் சதம் அடித்தார். 4வது இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார். அதாவது விக்கெட் கீப்பராக 4வது இன்னிங்சில் சதம் அடித்த முதல் வீரர் ரிஷப் பண்ட்தான். 

இதற்கு முன்பாக மகேந்திர சிங் தோனி 76 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதுவும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2007ம் ஆண்டில் அடிக்கப்பட்டது.  

முதல் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திய ரிஷப் பண்ட், அடுத்தடுத்த போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து, கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் சதம் அடித்து அந்த விமர்சனங்களுக்கு ரிஷப் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com