'எப்போதும் என் இதயம் கேரளாவுக்காக துடிக்கும்' சச்சின் டெண்டுல்கர் உருக்கம்

'எப்போதும் என் இதயம் கேரளாவுக்காக துடிக்கும்' சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
'எப்போதும் என் இதயம் கேரளாவுக்காக துடிக்கும்' சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
Published on

கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணியின் தனது பங்குகளை விற்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் 2014-ஆம் ஆண்டில் இருந்து இணைந்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தற்போது அதன் பங்குகளை விற்க முடிவு செய்திருப்பதாக தககல் வெளியாகி இருந்தது.

இந்த அணியின் இது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐபிஎல் இருப்பதை போல கால்பந்தில் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நடத்தப்படுவது உண்டு. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மொத்த பங்குகளில் 20 விழுக்காடு சச்சின் வசம் இருந்தது.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் இப்போது விளக்கமளித்துள்ளார், அதில் "இது ஒரு கடினமான முடிவுதான். ஆனால் எப்போதும் என் இதயத்தின் ஒரு பகுதி கேரளாவுக்காக துடித்துக்கொண்டு இருக்கும். கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஐ.எஸ்.எல். போட்டிகள் 5 ஆண்டுகளை எட்டிவிட்டன. இந்த அணி அடுத்த 5 ஆண்டுக்கு தயாராக வேண்டும். அதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எனது இந்த முடிவை அணியின் அனைவிரடமும் கலந்தாலோசிக்கப்பட்ட பின்பே எடுத்தேன்."

மேலும் பேசிய சச்சின் "கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ரசிகர்கள் அந்த அணி மீது நிபந்தனையில்லா அன்பினை வாரி வழங்கி வருகின்றனர். இது அந்த அணி எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை பெற உதவும். கடந்த நான்கு ஆண்டுகள் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி எனக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ளது. கால்பந்தாட்டத்தின் மீது என்னுடைய அன்பும் காதலும் அப்படிப்பட்டது. இளைஞர்கள் ஐ.எஸ்.எல். போட்டியில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தேசிய அணியில் இடம் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com