ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
Published on

உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் காண்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியின் கேப்டன்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா. அது குறித்து சற்றே தெரிந்துக் கொள்ளலாம்.

விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் கேப்டன் விராட் கோலிதான். இதுவரை ஒருமுறைக் கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாது அணி பெங்களூரு. ஆனால் விராட் கோலிக்கு சம்பளம் ரூ.17 கோடி.

ரோகித் சர்மா - மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.15 கோடி சம்பளம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 முறை கோப்பையை வென்றுக் கொடுத்தவர் ரோகித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படுகிறார்.

எம்.எஸ்.தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக 3 முறை கோப்பையை வென்ற அணி சிஎஸ்கே. 2008 முதல் இப்போது வரை அதற்கு தலைமை ஏற்று வழி நடத்தும் தோனியின் சம்பளம் ரூ.15 கோடி.

ஸ்ரேயாஸ் ஐயர் - டெல்லி கேபிடல்ஸ்

இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் கடந்தாண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு வரை முன்னேறியது. இந்த இளம் கேப்டனுக்கு சம்பளம் ரூ.7 கோடி.

ஸ்டீவ் ஸ்மித் - ராஜஸ்தான் ராயல்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் தவிர்க்க முடியாத வீரர் ஸ்டீவ் ஸ்மித். இவரை கடந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது அதன் நிர்வாகம். இவருக்கு ரூ.12 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

டேவிட் வார்னர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் !

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர். கடந்தாண்டு கேன் வில்லியம்சன் தலைமையின் கீழ் விளையாடிய வார்னர் இந்தாண்டு ஐதராபாத் அணிக்கு தலைமை ஏற்கிறார். இவருக்கு ரூ.12 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கே.எல்.ராகுல் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகிறார். இவருக்கு சம்பளமாக ரூ.11 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புடன் ராகுல் தலைமையில் களமிறங்குகிறது பஞ்சாப்.

தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கவுதம் காம்பீருக்கு பிறது கொல்கத்தா அணிக்கு நிலையான கேப்டன் அமையவில்லை. இதனையடுத்து தினேஷ் கார்த்திக் அந்த அணியின் கேப்டனாக கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவருக்கு ரூ 7.4 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. சாதனைகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com