மைதானத்திற்குள் ஓடிவந்து சல்யூட் அடித்த ரசிகர்.. கட்டிப்பிடித்து அன்பை பொழிந்த பாக். வீரர்

மைதானத்திற்குள் ஓடிவந்து சல்யூட் அடித்த ரசிகர்.. கட்டிப்பிடித்து அன்பை பொழிந்த பாக். வீரர்
மைதானத்திற்குள் ஓடிவந்து சல்யூட் அடித்த ரசிகர்.. கட்டிப்பிடித்து அன்பை பொழிந்த பாக். வீரர்
Published on

மைதானத்திற்குள் ஓடிவந்து தனக்கு சல்யூட் அடித்த ரசிகரை பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் தாப் கான் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களைச் சந்திக்க விளையாடும் பகுதிக்குச் செல்வது புதிதல்ல. தோனியின் ரசிகர்கள் பலமுறை மைதானத்திற்குள் நுழைந்து சேட்டை செய்ததை பார்த்திருப்போம். விராட் கோலிக்கும் இப்படி நடந்துள்ளது. ஆனால், கொரோனா நோய் தொற்று காரணமாக இது கணிசமாகக் குறைந்துள்ளது. ரசிகர்களும் தங்கள் சமூக இடைவெளியை பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் மைதானத்தின் நடுப்பகுதிக்கு ஓடிவந்து வணக்கம் செலுத்தினார். அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் துணைக் கேப்டன் அவரைக் கட்டிப்பிடித்தார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39வது ஓவரில் ஷதாப் 9 ரன்களில் பேட்டிங் செய்தார். அந்த ஓவரின் நான்காவது பந்து வீச்சுக்கு முன், ரசிகர் ஒருவர் மைதானத்தில் நுழைந்து மையப்பகுதிக்குச் சென்றார். அப்போதுதான் ஷதாப் அவரை கட்டிப்பிடித்தார். அதன் பிறகு, ரசிகர் திரும்பிச் சென்றார்.

பாபர் அசாம் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 275 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 72 ரன்கள் எடுத்த நிலையில் அவர் பாபர் அசாம் உடனான புரிதலின்மையால் ரன் ஆகினார். 56, 103, 106, 89, 65, 72 என தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் இமாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com