டி20 கிரிக்கெட்: அதிக சிக்ஸர் அடித்து ரோகித் சாதனை

டி20 கிரிக்கெட்: அதிக சிக்ஸர் அடித்து ரோகித் சாதனை
டி20 கிரிக்கெட்: அதிக சிக்ஸர் அடித்து ரோகித் சாதனை
Published on

டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் - தவான் ஜோடி நிதானமாக விளையாடினர். அவர்களது ஆட்டத்தை பார்க்கும்போது இந்திய அணி 130 -140 ரன்கள் தான் குவிக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ரோகித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல ஆடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் தவான் 35 ரன்கள் எடுத்துதிருந்த போது ஆட்டமிழந்தார். தவான் விக்கெட்டையும் பறிகொடுக்கும் போது இந்திய அணி 9.5 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ரெய்னா அதிரடியாக விளையாடினார். இந்நிலையில் ரோகித் தனது அரைசத்தை  பதிவு செய்தார். இதற்காக அவர் 42 பந்துகளை எடுத்துக்கொண்டார். பின்னர் அதிரடியாக விளையாடிய ரோகித் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து விளாசினார்.

 20ஓவர் முடிவில் இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் 89 ரன்களும் ரெய்னா 47ரன்களும் குவித்தனர். இந்தப்போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் முதலிடம் பிடித்துள்ளார். யுவராஜ் சிங்கை பின்தள்ளிவிட்டு ரோகித் முன்னேறியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 103 சிக்ஸர்களுடன் கிறிஸ்கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com