ஒரே ஓவரில் 39 ரன்கள்! 17 ஆண்டுகால யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு.. ருத்ரதாண்டவம் ஆடிய சமோயா அணி வீரர்!

சமோயன் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் யுவராஜ் சிங்கின் 17 ஆண்டுகால சாதனையைத் தகர்த்துள்ளார்.
டேரியஸ் விசர்
டேரியஸ் விசர்எக்ஸ் தளம்
Published on

2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் இந்திய வீரர் யுவராஜ் சிங், ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். உலகக் கோப்பை டி20 வரலாற்றில் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுக்கப்பட்டது அதுவே முதன்முறை.

அதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பொல்லார்டு (2021), நிக்கோலஸ் பூரன் (2024), நேபாள வீரர் திபேந்திர சிங் (2024) மற்றும் ரோகித் சர்மா/ரிங்கு சிங் (2024) இணையும் ஒரு ஓவரில் 36 ரன்கள் குவித்துள்ளனர். என்றாலும், யுவராஜ் சிங்கின் சாதனை சமன் மட்டுமே செய்யப்பட்டிருந்த நிலையில், 17 ஆண்டுகளாக அதனை யாரும் தகர்க்க முடியவில்லை. இந்த நிலையில், சமோவா வீரர் ஒருவர் யுவராஜ் சிங்கின் சாதனையைத் தகர்த்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை|உடலில் இருந்தது150 கிராம் விந்தணுவா? பிரேதப் பரிசோதனை சொல்வது என்ன?

டேரியஸ் விசர்
அடேங்கப்பா!! ஒரே ஓவரில் 43 ரன்களா? 134வருட கவுன்ட்டி கிரிக்கெட் வரலாற்றில் இங். வீரர் அசத்தல் சாதனை!

ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை ஈஸ்ட் ஏசியா - பசிபிக் தகுதிச் சுற்றுப் போட்டியில், பசிபிக் தீவுகளில் உள்ள நாடுகளான வனாட்டு மற்றும் சமோவா ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சமோயன் அணியில், வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும், அந்த அணியின் டேரியஸ் விசர் ருத்ர தாண்டவமாடினார்.

இறுதியில் அந்த அணி, 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. அதில் டேரியஸ் விசர் மட்டும் 5 பவுண்டரி, 14 சிக்சர்களுடன் 62 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 போட்டியில் சமோவா அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

குறிப்பாக, இந்தப் போட்டியில் வனாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15வது ஓவரில் டேரியஸ் விசர், மொத்தம் 6 சிக்ஸர்களை அடித்து அட்டகாசப்படுத்தினார்.

தவிர, அதே ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. இதன்மூலம், அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது.

மொத்தம் 9 பந்து - 39 ரன்கள்!

டேரியஸ் விஸர், முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். நான்காவது பந்தை நோ பாலாக வீசினார். அதற்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் மீண்டுமொரு சிக்ஸர் அடித்தார். 5வது பந்து டாட் ஆனது. மீண்டும் 6வது பந்தினை நோ பாலாக வீச அதில் ஒரு ரன் கிடைத்தது. அதற்காக வீசப்பட்ட பந்தையும் நோ பாலாக வீசினார். ஆனால் அந்த பந்தினை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். மீண்டும் வீசப்பட்ட லீகல் 6வது பந்தில் மற்றொரு சிக்ஸர் விளாசப்பட்டது. மொத்தம் 6 சிக்ஸர் மற்றும் மூன்று நோ பால்-க்கு 3 எக்ஸ்ட்ரா ரன்கள் என மொத்தம் 39 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்து புதிய சாதனை படைக்கப்பட்டது. இதன்மூலம் 17 ஆண்டுகளாக அசைக்க முடியாத யுவராஜ் சிங்கின் சாதனை தகர்க்கப்பட்டது. இந்தப் போட்டியில், சமோவா அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆடிய வனாட்டு அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இதையும் படிக்க: 2025 IPL|தோனியைத் தக்கவைக்கப் போராடிய CSK.. எதிர்த்த காவ்யா மாறன்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன?

டேரியஸ் விசர்
WI vs AFG | ஒரே ஓவரில் 36 ரன்கள்! ஆப்கானை அலறவிட்டு 4 சாதனை பட்டியலில் இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com