2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு!

2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு!
2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு!
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். 

இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் வேகப்பந்துவீச்சாளர் பீடிட்டுக்கு பதிலாக அன்ரிச் நார்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்:

இந்திய அணி:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

தென்னாப்பிரிக்க அணி:
டுபிளிசிஸ், மார்க்ரம், டீன் எல்கர், புருயின், பவுமா, டி காக், முத்துசாமி, பிலாண்டர், கேசவ் மகாராஜ், ரபாடா, அன்ரிச் நார்ஜே

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com