அமித் பங்கால், நிது கங்காஸ் அசத்தல்..குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 தங்கம்

அமித் பங்கால், நிது கங்காஸ் அசத்தல்..குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 தங்கம்
அமித் பங்கால், நிது கங்காஸ் அசத்தல்..குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 தங்கம்
Published on

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வெற்றி நடை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பிவி சிந்து வெற்றி பெற்றார். 21-19, 21-17 என்ற நேர்செட்களில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின்னை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் பிவி சிந்துவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

மகளிருக்கான ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஆக்கியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

குத்துச்சண்டை ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டு உடன் மோதினார். இந்த போட்டியில் அமித் இறுதியில் 5-0 என்ற கணக்கில் கியாரனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் இங்கிலாந்து வீராங்கனை டெமி-ஜேட் ரெஸ்டனுடன் மோதினார். இந்த போட்டியில் நிது கங்காஸ் 5-0 என்ற கணக்கில் டெமி-ஜேட் ரெஸ்டனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வரலாற்றில்  மேரி கோமிற்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை  நிது கங்காஸ் பெற்றுள்ளார்.

இதையும் படிக்க: செஸ் கிராண்ட் மாஸ்டரானார் 16 வயதான பிரணவ் வெங்கடேஷ்: தமிழகத்துக்கு மேலுமொரு மகுடம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com