35 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையை தொட்டு ரசித்த கபில் தேவ்

35 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையை தொட்டு ரசித்த கபில் தேவ்
35 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பையை தொட்டு ரசித்த கபில் தேவ்
Published on

1983ம் ஆண்டு இந்திய அணி வென்ற உலகக் கோப்பையை முன்னாள் கேப்டன் கபில் தேவ் 35 ஆண்டுகளுக்கு பின் பார்த்து ரசித்துள்ளார். 

1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது இந்தியா. 2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி வென்ற உலகக் கோப்பை பிசிசிஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டது. 

இந்நிலையில், 1983ம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய அணி வென்ற உலகக் கோப்பையை பிசிசிஐ அலுவலகம் சென்று கபில் தேவ் பார்த்துள்ளார். உலக்கோப்பை உடன் உள்ள படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தானும், தன்னுடைய சக வீரர்களும் இந்த அழகான உலகக் கோப்பை எண்ணி பெருமைப்படுகிறோம் என்று அவர் தனது மகிழ்ச்சியை தனது ட்விட்டரில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com