தோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு

தோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு
தோனியுடன் களம் கண்ட நதீம் - 15 வருட உழைப்புக்கு பின் அணியில் வாய்ப்பு
Published on

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் இஷாந்த் ஷர்மாவிற்கு பதிலாக ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். இது ஷாபாஸ் நதீமிற்கு முதல் டெஸ்ட் மட்டும் முதல் சர்வதேச போட்டியும்தான். 

ராஞ்சி ஆடுகளத்தில் பந்துகள் மிகவும் குறைந்த அளவிலே பவுன்ஸ் ஆகும் என்பதால் இந்திய அணியில் மூன்றாவதாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்க திட்டமிடப்பட்டது. குல்தீப் யாதவிற்கு ஏற்பட்டுள்ள தோள்பட்டை காயம் காரணம் அவர் அணியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஷாபாஸ் நதீமிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஷாபாஸ் நதீம் 15ஆண்டுகளுக்கு முன்பு ஜார்கண்ட் அணிக்காக தனது முதல் போட்டியில்(முதல்தர) களமிறங்கினார். அப்போது தோனியும் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வந்தார். நதீம் இதுவரை 110 முதல் தர போட்டிகளில் விளையாடி 424 விக்கெட்களை எடுத்துள்ளார். இவர் குறிப்பாக 2015-17 வரையிலான இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் மொத்தம் 107 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மேலும் இங்கலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் இவர் 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அத்துடன் வெஸ்ட் இண்ட்ஸ் சுற்றுப்பயணம் செய்த இந்திய ஏ அணியில் இவர் இடம் பெற்று இருந்தார். இதில் இவர் 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை கைப்பற்றினார். 

அதேபோல தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான தொடரில் நதீம் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்களை வீழ்த்தினார். 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இவர் இடம்பெற்று இருந்தார். எனினும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவர் இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார். இது 15 ஆண்டு கால கடின முயற்சிக்கு வெற்றியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com