“வார்னர் முதல் ஜோசப் வரை” - நடப்பு ஐபிஎல் தொடரில் 15 முக்கிய சாதனைகள்

“வார்னர் முதல் ஜோசப் வரை” - நடப்பு ஐபிஎல் தொடரில் 15 முக்கிய சாதனைகள்
“வார்னர் முதல் ஜோசப் வரை” - நடப்பு ஐபிஎல் தொடரில் 15 முக்கிய சாதனைகள்
Published on

2019 ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நாளை முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்குகின்றன. லீக் சுற்றில் கடந்த 6 வாரங்களில் 56 போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஒரு சில போட்டிகளை தவிர்த்து பெரும்பாலான போட்டிகளில் பரபரப்பு இருந்தது. லீக் சுற்றுவரையிலும் ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் 15 முக்கியமான சாதனைகள்:

1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியின் அல்ஜர்ரி ஜோசப் 12 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். இதுவே ஐபிஎல் போட்டிகளில் சிறந்த விக்கெட்.

2. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேர்ஸ்டோவ், வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. இதுவே ஐபிஎல் போட்டிகளில் தொடக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

3. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேர்ஸ்டோவ், வார்னர் ஜோடி ஒரே இன்னிங்ஸில் இரண்டு பேர் சதம் அடித்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

4. பேர்ஸ்டோவ், வார்னர் ஜோடி இந்தத் தொடரில் அடித்த 791 ரன்களே ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சம் ஆகும்.

5. வார்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 8 முறை அரைசதம் அடித்துள்ளார். அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 

6. புவனேஸ்வர் குமார் முதல் வீரராக ஐபிஎல் தொடரில் 100 விக்கெட் சாய்த்துள்ளார்.

7. மும்பை இண்டியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேபிடன்சுக்கு எதிரான போட்டியில் 15 ரன்னில் 8 விக்கெட்டை பறிகொடுத்தது. 

9. 17 வயதான (17 வருடம் 175 நாட்கள்) ரியான் பராக் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு சஞ்சு சாம்சன் 18 வயதில் (18 வருடம் 169 நாட்கள்) அரைசதம் அடித்தது சாதனையாக இருந்தது.

10. பெங்களூர் அணியின் பிரயாஸ் ராய் பார்மன் மிகவும் குறைந்த வயதில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். அவருக்கு வயது, 16 வருடம், 157 நாட்கள்.

11. குறைந்த வயதில் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பஞ்சாப் அணியின் சாம் கர்ரன் பெற்றார். அவருக்கு வயது, 20 வருடம், 302 நாட்கள்.

12. ஐபிஎல் தொடரில் 100 கேட்ச் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷாவின் கேட்சை பிடித்த போது அந்த மைல்கல்லை எட்டினார்.

13. 150 போட்டிகளில் விளையாடிய முதல் அயல்நாட்டு வீரர் என்ற சிறப்பை ஏபி டிவில்லியர்ஸ் பெற்றுள்ளார்.

14. ஐபிஎல் தொடரில் முதல் கேப்டனாக தோனி 4000 ரன்களை அடித்துள்ளார். 

15.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தினேஷ் கார்த்திக் அடித்த 97* ரன்களே கொல்கத்த கேப்டன்களில் அதிகபட்சம் ஆகும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com