15-வது ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்- எந்தெந்த அணிகள் வாங்கின?

15-வது ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்- எந்தெந்த அணிகள் வாங்கின?
15-வது ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்- எந்தெந்த அணிகள் வாங்கின?
Published on

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 15-வது சீசனுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், எந்தெந்த அணிகளால் எவ்வளவு தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

15-வது ஐ.பி.எல். சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டினியா ஓட்டலில், கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே, 8 அணிகளும் 27 வீரர்களை தக்க வைத்திருந்தநிலையில், புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 3 வீரர்களை ஏலத்திற்கு முன்னதாகவே வாங்கியிருந்தது.

இதையடுத்து, இந்த மெகா ஏலத்தில் பங்குபெறுவதற்கு, மொத்தம் 1,214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.

அந்த 590 வீரர்களில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும், 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் மெகா ஏலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம் 370 இந்தியர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் இருந்தார்கள்.

இந்த ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 30 வீரர்கள் பங்குபெற விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தநிலையில், சையத் முஷ்டாக் அலி டி20, விஜய் ஹசாரே டிராபி தொடர்களில் அபாரமாக விளையாடி அசத்திய தமிழக அணி வீரர்களை வாங்க பல அணிகள் ஆர்வம் காட்டின. அதில் மொத்தம் 14 தமிழக வீரர்கள் ஐ.பி.எல். 15-வது சீசனுக்கு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல்.லில் இடம்பெற்றுள்ள 14 தமிழக வீரர்கள்:

1. ஷாருக்கான் (பஞ்சாப் கிங்ஸ்) – ரூ. 9 கோடி

2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) – ரூ. 8.75 கோடி

3. வருண் சக்ரவர்த்தி (கொல்கத்தா) – ரூ. 8 கோடி (ஏற்கெனவே தக்கவைக்கப்பட்டார்)

4. தினேஷ் கார்த்திக் (ஆர்.சி.பி.) – ரூ. 5.50 கோடி

5. ரவிச்சந்திரன் அஸ்வின் (ராஜஸ்தான் ) – ரூ. 5 கோடி

6. டி. நடராஜன் (சன் ரைசர்ஸ்) – ரூ. 4 கோடி

7. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி

8. முருகன் அஸ்வின் (மும்பை) – ரூ. 1.60 கோடி

9. விஜய் சங்கர் (குஜராத்) – ரூ. 1.40 கோடி

10. சஞ்சய் யாதவ் (மும்பை) – ரூ. 50 லட்சம்

11. சாய் சுதர்சன் (குஜராத் ) – ரூ. 20 லட்சம்

12. பாபா இந்திரஜித் (கொல்கத்தா) – ரூ. 20 லட்சம்

13. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே) – ரூ. 20 லட்சம்

14. என்.ஜெகதீசன் (சிஎஸ்கே) – ரூ. 20 லட்சம்

இதில் 12 பேர் ஏற்கெனவே ஐ.பி.எல்.லில் விளையாடியவர்கள். பாபா இந்திரஜித்தும், சாய் கிஷோரும் முதல்முறையாக ஐ.பி.எல்.லுக்கு வந்துள்ளனர். இந்த வீரர்களில் எத்தனை பேர் பிளேயிங் 11-ல் இடம்பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com