ஐ.பி.எல் தொடரை மிஸ் செய்யப் போகும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார் ?

ஐ.பி.எல் தொடரை மிஸ் செய்யப் போகும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார் ?
ஐ.பி.எல் தொடரை மிஸ் செய்யப் போகும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார் ?
Published on

கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த மார்ச் முதல் மே வரை நடைபெற திட்டமிட்டிருந்த 2020க்கான ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியன்று ஐக்கிய அமீரகத்தில் ஆரம்பமாக உள்ளது. 

இதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில் ஐ.பி.எல் அணிகளின் வீரர்கள் அனைவரும் நான்கு அல்லது ஐந்து முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளை பொறுத்தே தொடரில் பங்கேற்க முடியும் எனவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பி.சி.சி.ஐ. 

டைட்டில் ஸ்பான்ஸர் சிக்கல், வீரர்களுக்குகான கட்டுப்பாடு என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த தொடரில் வெளிநாடுகளை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி உருவாக்கப்படாதது, லாக் டவுன் சிக்கல் மற்றும் வெளிநாடுகளில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட சர்வதேச போட்டிகள் மாதிரியான காரணத்தினால் ஐ.பி.எல் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடர் முழுவதுமாக தவிர்க்க வேண்டியிருக்கும் என பரவலாக பேசப்படுகிறது. 

ஆர்.சி.பி அணியின் ஏபி டிவில்லியர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரபாடா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்டீவ் ஸ்மித், நைட் ரைடர்ஸ் அணியின் கம்மின்ஸ், பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல், ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பட்லர், ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மாதிரியான முக்கிய வீரர்கள் இந்த சீசனை மிஸ் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com