ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் மற்றும் இடம் பெறக் கூடாத வீரர்களைக் குறிப்பிட்டும் பேசி உள்ளார், முன்னாள் இந்திய வீரர் மற்றும் முன்னாள் இந்திய அணித்தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பெறக்கூடிய வாய்ப்புள்ள 20 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு ஒரு அணித்தேர்வாளராக வீரர்களை பார்க்கும்போது, சில குறிப்பிட்ட வீரர்கள் அணிக்குள் நிச்சயம் இருக்க வேண்டும் என்றும், சில வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டாம் என்றும் கூறியுள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தனது இந்திய ஒருநாள் உலகக் கோப்பை அணி பட்டியலில் இடம் பெற கூடாத இரண்டு பெரிய வீரர்களின் பெயரைக் கூறியுள்ளார். சமீபத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2023 ODI உலகக் கோப்பைக்கான 20 வீரர்களைக் கொண்ட சாத்தியமான பட்டியலை பெயரிட்டது. மற்றும் ஒரு ‘கோர் டீம்’ பெறுவதற்காக நிர்வாகம் அவர்களின் அனைத்து இருதரப்பு தொடர்களிலும் பட்டியலில் உள்ள வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சாத்தியமான பட்டியல் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
நான்கு மீடியம் வேகப்பந்து வீச்சாளர்கள் போதும்!
சீக்கா, தனது பட்டியலில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் போட்டிகளை ஒற்றைக் கையால் வெல்லக்கூடிய வீரர்கள் இருப்பதாக கூறினார். தீபக் ஹூடா எனது அணியில் இருப்பார். அவர் பகுதி நேர ஸ்பின்னராக போட்டியின் இடையில் பயன்படுத்த பயன்படுவார் என்பதாலும், மற்றும் போட்டியை இறுதியில் களமிறங்கி முடித்துவைக்ககூடிய ஒரு வீரராக இருப்பார் என்பதாலும் அவர் ஹூடாவை அவருடைய அணிக்குள் வைத்திருக்கிறார்.
பந்துவீச்சாளர்கள் யார் யாரை அணிக்குள் கொண்டுசெல்வேன் என்றால், “எனது வேகப்பந்து வீச்சாளர்களாக, ஜஸ்பிரித் பும்ரா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகிய நான்கு மீடியம் வேகப்பந்து வீச்சாளர்கள் போதும். முகமது ஷமியும் அந்த வரிசையில் அப்படிப்பட்டவராக இருப்பார். நான் தேர்வாளர்களின் தலைவராக பேசுகிறேன், ரசிகனாக அல்ல. தீபக் ஹூடாவை கொண்டு வருவேன். இவர்கள்தான் போட்டிகளை வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் போட்டிகளில் வெற்றி பெற விரும்புகிறீர்கள், யூசுப் பதான் போன்ற குதிரைகள் உங்களுக்குத் தேவை. அவர்கள் போட்டிகளை ஒற்றைக் கையால் வெல்லக்கூடியவர்களாக இருப்பார்கள் ”என்று முன்னாள் இந்திய தேர்வாளர் சீக்கா கூறினார்.
இந்த இரண்டு வீரர்கள் அணியில் இடம்பெற கூடாது!
”ஷுப்மான் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர்” ஆகியோர் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "எனது பட்டியலில் இரண்டு வீரர்களான சுப்மான் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை 2022க்குப் பிறகு கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வெடுக்கப்பட்டதிலிருந்து, தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் தனது நியாயமான ஆட்டங்களைப் பெற்றுள்ளார். இருப்பினும், வலது கை ஆட்டக்காரர் ஒரு நாள் வடிவத்தில் நிலையானதாக இருக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூத்த வீரர் ஷிகர் தவானுக்கு முன்னதாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மறுபுறம், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் சமீபத்தில் முடிவடைந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்பதும், இலங்கைக்கு எதிரான 50 ஓவர் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 10ஆம் தேதி இலங்கையை இந்தியா ஒருநாள் போட்டிகளில் சந்திக்கும் நிலையில், 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை தொடருக்கான பாதை தொடங்கியுள்ளது. இரு தரப்பும் அணிகளை பரிசோதிக்க வேண்டும், இது உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கான சில வீரர்களைக் கண்டறிய உதவும் என்று பார்க்கப்படுகிறது.