’என்னய்யா ரூல் இது?’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்!

’என்னய்யா ரூல் இது?’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்!
’என்னய்யா ரூல் இது?’: ஐசிசி-யை விளாசும் முன்னாள் வீரர்கள்!
Published on

உலகக் கோப்பை போட்டியில், அதிக பவுண்டரிகளை வைத்து வெற்றி பெற்ற அணியை தீர்மானித்தற்கு முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய இந்தப் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் திருப்பங்களும் விறுவிறுப்பும் மிகுந்திருந்தன. முதலில் ஆடிய நியூசிலாந்து, 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. டாம் லாதம் 47 ரன்னும் ஹென்றி நிக்கோலஸ் 55 ரன்னும் எடுத் தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும், 241 ரன் எடுத்ததால் போட்டி, டை ஆனது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்னும் பட்லர் 59 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஓவரும் டை ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்தை விட, இங்கிலாந்து அணி கூடுதலாக 6 பவுண்டரிகளை அடித்திருந்தது. இதன்மூலம், தங்களது 44 ஆண்டுகால கனவைப் பூர்த்தி செய்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் அதிக பவுண்டரி முறையில், வெற்றி பெற்ற அணியை தேர்வு செய்ததற்கு முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி யை தெரிவித்துள்ளனர். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், ‘’இந்த அதிக ’பவுண்டரி’ விதியை ஜீரணிப்பது கடினமானது. மீண்டும் ஒரு சூப்பர் ஓவரை நடத்தி, ஏதாவது ஓர் அணியை வெற்றி பெற வைத்திருக்கலாம். அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றி யைத்  தீர்மானிப்பதை விட, கோப்பையை பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருந்திருக்கும். நியூசிலாந்து அணிக்கு இது கடினமா னது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர், ‘’ இப்படியொரு முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்பது புரியவில்லை. ஐசிசி-யின் இந்த விதி கேலிக்குரியது. கடைசிவரை சிறப்பாக விளையாடிய இரண்டு அணிக்குமே இது வெற்றிதான்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட்லீ, ’’வெற்றி பெற்ற அணியை தீர்மானிக்க எடுத்த இந்த முடிவு, பயங்கரமானது. இந்த விதி மாற்றப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங், ‘’இந்த முடிவு கொடூரமானது’’ என்று தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், ‘’பவுண்டரிகள் அடித்ததை வைத்து வெற்றியை தீர்மானிப்பதா? இது சரியான முடிவல்ல. ஆனால் சிறந்த போட்டியாக இருந்தது’’ என்றார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “இந்த விதியை நான் ஏற்கவில்லை. ஆனால், விதிகள் விதிகள்தான். உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். இறுதிவரை போராடிய நியூசிலாந்து அணி, என் மனதில் நிற்கி றது. இது சிறந்த இறுதிப்போட்டி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com