”இந்த இந்திய அணியை B டீம் என அழைக்கமாட்டேன்” - கேசவ் மஹாராஜ்

”இந்த இந்திய அணியை B டீம் என அழைக்கமாட்டேன்” - கேசவ் மஹாராஜ்
”இந்த இந்திய அணியை B டீம் என அழைக்கமாட்டேன்” - கேசவ் மஹாராஜ்
Published on

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை B டீம் என்று அழைக்க மாட்டேன் எனவும், அவர்களிடம் உலகத்தரமான அணி வீரர்கள் இன்னும் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார் தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மஹாராஜ்.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியின் முதன்மை அணி சென்று இருப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெற்று ஆடி வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் இல்லை. ஆனால் ஷிகர் தவான் தலைமையிலான ஒருநாள் அணி இன்னும் உலகத் தரத்தில்தான் உள்ளது என்றும், நான் இந்த இந்திய அணியை B டீம் என்று கூற மாட்டேன் என்றும் தென்னாப்பிரிக்க அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியில் இந்திய அணியை 9 ரன்களில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.

இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் கேசவ் மஹாராஜ், "நான் இந்த இந்திய அணியை  B டீம் இந்திய தரப்பு என்று அழைக்க மாட்டேன். இந்தியாவிடம் நிறைய திறமைகள் உள்ளன. அவர்கள் நான்கு - ஐந்து வகையிலான சர்வதேச அணிகளை களமிறக்க முடியும். நிறைய வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் சர்வதேச அனுபவம் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிப்படையாக சிறப்பாக விளையாட நீங்கள் உங்களை தயார்படுத்த விரும்புகிறீர்கள். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளனர் என்று கூறினார்.

ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக இருந்த தப்ரைஸ் ஷம்சி, இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தால் 8 ஓவர்களில் 89 ரன்கள் விட்டுகொடுத்ததை பற்றி கேள்வி எழுப்பியபோது, லக்னோ போட்டி இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளருக்கான ஒரு அரிய நாள், அவர் உண்மையில் மோசமாக விளையாடியதாக நான் நினைக்கவில்லை. இந்திய பேட்டர்கள் யாரையாவது எடுக்க வேண்டியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவருக்கு அது அமையவில்லை. இறுதிகட்ட ஓவர்களில் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். அவர் மீண்டும் பார்மிற்கு வர சிலநேரமே போதுமானது என்று ஷம்சிக்கு ஆதரவாக பேசினார்.

மேலும் இந்திய முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசிய அவர், ”மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான இங்கு, நான் அவருடன் சிறிய உரையாடல் செய்ய விரும்புகிறேன். எனக்கு அவருடன் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக அவர் இருந்தார். குறிப்பாக கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை, மைதானத்தில் அவரது அமைதி, என்று அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com