2017ஆம் ஆண்டின், சிறந்த கால்பந்து வீரருக்கான பாலன் டி ஆர் விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரோனால்டோ ஐந்தாவது முறையாக வென்றுள்ளார்.
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. இவர் ரியல் மேட்ரிட் அணிக்காகவும், போர்சுகல் தேசிய கால்பந்து அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தாண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்த விருதை 5வது முறையாக ரொனால்டோ கைப்பற்றுகிறார். இதன்மூலம் ஐந்து முறை இந்த விருது வென்றிருந்த மெஸ்சியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். 32 வயதான ரொனால்டோ, ஏற்கனவே 2008, 2013, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் பாலன் டி ஆர் விருதினை வென்றிருந்தார்.இந்த விருதை பெற ரொனால்டோ அவரது தாயான மரியா டோலோரெஸுடனும் அவரது மூத்த மகனான கிறிஸ்டியானோ ஜூனியருடனும் வந்திருந்தார்.
இதன்பின்னர் பேசிய ரொனால்டோ, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அது என் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணம் என்று ரொனால்டோ கூறினார். இந்த வருடம் நாங்கள் சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா கோப்பைகளை வென்றிருக்கிறாம். சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியில் நான் சிறந்த வீரராக இருந்தேன். நான் பெறும் கோப்பைகள் இது போன்ற பரிசை வெல்ல எனக்கு உதவுகின்றன. மாட்ரிட் மற்றும் போர்ச்சுகல் அணிகளில் உள்ள சக வீரர்களுக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கு மிகவும் முக்கியம். என ரொனால்டோ பேசினார்.