ஆஸி கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் ! சமூக வலைத்தளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் !

ஆஸி கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் ! சமூக வலைத்தளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் !
ஆஸி கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் ! சமூக வலைத்தளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் !
Published on

இங்கிலாந்தில் - வேல்ஸ் நகரங்களில் இம்மாதம் இறுதியில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக முக்கிய அணிகள் எல்லாம் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி இம்மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆஸி அணியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் விளையாட தடை விதிக்கப்பட்ட வார்னரும், ஸ்மித்தும் அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர்கள் இருவருமே இடம் பிடித்தனர். இது ஆஸி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களால் வார்னரையும், ஸ்மித்தையும் மன்னிக்க மனமில்லை இல்லை போல. இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் குழு ஒன்று உள்ளது. அதன் பெயர் "இங்கிலாந்தின் பார்மி ஆர்மி". இந்தக் குழுவினர் மேட் நடக்கும் மைதானங்களுக்கு சென்று இங்கிலாந்து அணிக்கு தாறுமாறாக ஆதரவு தருவார்கள். மிகப் பெரிய அளவில் பேனர்கள் வித்தியாசமான கெட்டப்புகள் என அசத்துவார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம்மூர் தல, தளபதி ரசிகர்கள் போல என சொல்லலாம்.

இப்போது இந்த பார்மி ஆர்மி குழுவினர், ஆஸி வீரர்களை வெறுப்பேத்தும் விதமாக டி-ஷர்ட் ஒன்றை வடிவமைத்துள்ளனர். அதில் ஆஸி அணியின் ஜெர்சிக்கு நடுவே "சீட்ஸ்" அதாவது ஏமாற்றுபவர்கள் என ப்ரின்ட் செய்யப்பட்டுள்ளது. இது ஆஸி வீரர்களையும் கடுப்பேற்றியுள்ளது. எதற்காக இந்த "சீட்ஸ்" வார்த்தை ? ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. பந்தை சேதப்படுத்தியவர்களை சீட்ஸ் என இப்போது ஞாபக்கப்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் பார்மி ஆர்மி. மேலும், அதுபோன்ற டீ-ஷர்ட் அணிந்து மைதானத்துக்கு வரப்போவதாகவும் சவால் விட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் "நாங்கள் எத்தகைய எதிர்ப்பையும் சந்திக்க தயாராகவே இருக்கிறாம், வாங்க பாத்துக்கலாம்" என பதில் சவால் கொடுத்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com