ஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா?: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்

ஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா?: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்
ஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா?: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்
Published on

டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் என்றால் ஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிடுகிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

டெல்லி காற்றுமாசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் கடந்த 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் கிழக்கு டெல்லி தொகுதி எம்.பி.யான கவுதம் கம்பீர் பங்கேற்கவில்லை. இதை மக்கள் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் 'பாரதிய ஜனதா எம்.பி. கவுதம் கம்பீரை காணவில்லை' என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 'கடைசியாக இந்தூரில் பார்த்ததாவும் அப்போது கம்பீர், ஜிலேபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்' என்றும் கிண்டலடிக்கும் வகையிலான வாசகங்களும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணனின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த, கவுதம் கம்பீரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாடினும் ஜிலேபி சாப்பிடும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி அதை விமர்சனம் செய்து சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இந்த நிலையில், கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார். அன்றைய தினம் கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனை செய்யும் பணி இருந்ததாகவும் இதற்கான ஒப்பந்தம், தாம் அரசியலிற்கு வருவதற்கு முன்பே கையெழுத்தானதால் தவிர்க்க முடியாமல் போனதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஜிலேபி சாப்பிடும் பழக்கத்தை தாம் விட்டுவிட்டால் டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் என்றால் நிரந்தரமாக அதை செய்யத் தயார் என்றும் கம்பீர் கூறியுள்ளார். காற்று மாசை கட்டுப்படுத்துவதை ஒரு அறையில் அமர்ந்துகொண்டு கூட்டத்தில் விவாதிப்பதைவிட செயலில் காட்டுவதையே தாம் விரும்புவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com