“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா 

“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா 
“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா 
Published on

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளதாக ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை சீரமைக்க, நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மேலும் வாரியத்தை நிர்வகிக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நிர்வாகக் குழுவை அமைத்தது. லோதா குழு பரிந்துரைப்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவந்தது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த என்.ஸ்ரீநிவாசன், குஜராத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் படேலை தலைவர் பதவிக்கு முன்னிறுத்திய நிலையில், பல மாநில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கசிந்தது. 

மேலும், அவை அனைத்தும் ஒருமனதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலியை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சவுரவ் கங்குலி இன்று தாக்கல் செய்தார். வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தேர்வாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ தலைவராக கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று அதன் முன்னாள் நிர்வாகியும் ஐபிஎல் தலைவருமான ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.  

கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பனர்ஜி தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “ஒருமனதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நீங்கள் தேர்வானதற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள் கங்குலி. உங்களது நிர்வாகக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். உங்களை உருவாக்கியதற்காக மேற்கு வங்கம் பெருமை கொள்கிறது. மேலும் புதிய சிறப்புகளை நீங்கள் பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com