தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, சச்சின் ஒரு விவேகமானவர் என்றும், ஆனால் சேவாக் அப்படி இல்ல பைத்தியம் என்றும் கேலியாக பதிலளித்துள்ளார்.
”சச்சின் ஒரு ஸ்பெஷலானவர், அவரை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவருக்கு விலா எலும்பில் அடிபட்டபோது, அவர் சத்தம் போடவேயில்லை. நான் சென்று உங்களுக்கு ஏதும் பிரச்னை இல்லையே என்று கேட்டேன், ஆனால் அவர் தொடர்ந்து ரன்களை அடிக்க ஆரம்பித்து விட்டார். மறுநாள் காலையில் அவருடைய விலா எலும்புகளில் இரட்டை முறிவு ஏற்பட்டது" என்று கங்குலி கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, அபுதாபியில் நடைபெற்ற தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை பற்றிய பல கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டபோது, மனம் திறந்து பல சிறந்த பதில்களை அவர் கூறினார்.
சச்சின் மற்றும் சேவாக் இருவரில் நீங்கள் யாருடன் அதிகம் ஓப்பனிங் செய்வதை என்ஜாய் செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "சச்சின் மிகவும் புத்திசாலி, சேவாக் பைத்தியம். எனவே அது சச்சின் தான் ” என்று கேலியுடன் கூறினார். " சச்சின் உண்மையில் எனது ஆட்டத்தை உயர்த்தினார்" என்றார்.
உங்களின் பாராட்டுக்குரிய வீரர் யார் என்ற மற்றோரு கேள்விக்கும், கங்குலி மீண்டும் லிட்டில் மாஸ்டரின் பெயரைத் தான் தேர்ந்தெடுத்தார். “ சச்சின் தான், அவர் சிறப்பு வாய்ந்தவர். நான் அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். விலா எலும்பில் அவருக்கு அடிபட்டதை நான் பார்த்திருக்கிறேன். அவர் சத்தம் போடவேயில்லை தொடர்ந்து ரன்கள் அடிக்க ஆரம்பித்து விட்டார். மறுநாள் காலையில் அவருக்கு விலா எலும்பில் இரட்டை முறிவுகள் ஏற்பட்டிருந்தது. அவருடன் ஆடியபோது என்னுடைய பேட்டிங் திறனும் உயர்ந்தது” என்று தெரிவித்தார்.
எங்கு டெஸ்ட் போட்டிகள் ஆடுவது மிகவும் சவாலான விஷயம் - ஆஸ்திரேலியாவா அல்லது இங்கிலாந்தா என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலியா என்று பதிலளித்தார். மற்றும் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் ஆகியவற்றில் எதில் இருக்க விரும்புகிறீர்கள், ஒன்றை தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டதற்கு, கங்குலி கிரிக்கெட் அணியுடன் செல்ல தேர்வு செய்தார்.
2001-ல் கொல்கத்தா டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி அல்லது 2002-ல் லார்ட்ஸில் நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டபோது, “2001-ல் பெற்ற வெற்றி தான் இந்திய அணியை வேறொரு அணியாக மாற்றியது. அது அணியின் மீதான நம்பிக்கையை உயர்த்தியது” என்றார்.
மேலும் கங்குலி தலைமைத்துவத்தைப் பற்றி விரிவாகப் பேசிய அவர், ” மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது முக்கியம். " இது என் வழி அல்லது நெடுஞ்சாலை வழி அல்ல" என்று அவர் பல உதாரணங்களை மேற்கோள் காட்டினார்.
பல தலைமைப் பதவிகளில் இருந்த அவர், சரியான திறமையைக் கண்டறிந்து அதற்குப் போதிய வாய்ப்பை வழங்குவது முக்கியத்துவம் என்று பேசினார்.