இப்படியா வீரர்களை நிராகரிப்பீங்க? ’யோ-யோ’வுக்கு எதிராக திடீர் குரல்!

இப்படியா வீரர்களை நிராகரிப்பீங்க? ’யோ-யோ’வுக்கு எதிராக திடீர் குரல்!
இப்படியா வீரர்களை நிராகரிப்பீங்க? ’யோ-யோ’வுக்கு எதிராக திடீர் குரல்!
Published on

'வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரரை யோ-யோ டெஸ்ட் மூலம் அரை மணி நேரத்தில் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்? என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சந்தீப் பட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 'யோ யோ' உடல் தகுதி தேர்வு இன்று கட்டாயம்! ’யோ யோ’வின் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். இதை தொடாதவர்களுக்கு அணியில் இடமில்லை. இதில் முதல் பலியானது, சுரேஷ் ரெய்னா. பிறகு யுவராஜ் சிங், வாஷிங்டன் சுந்தர் என நீண்டது பட்டியல். பிறகு மீண்டும் அவர்கள் தேர்வு பெற்றனர். 

இந்நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் வீரர்களுக்கு ’யோ யோ’ டெஸ்ட் நடத்தப்பட்டது. இதில் தேர்வாகாததால் இந்திய ஏ அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார். பின்னர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. அடுத்து ஒரு நாள் போட்டியில் இருந்து அம்பத்தி ராயுடு! ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, ’யோ- யோ’வால், அணியில் இடம்பெறாமல் போனது பலரின் புருவத்தை உயர வைத்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சந்தீப் பட்டீல் கூறும்போது, ’டெஸ்ட் கிரிக்கெட் போல, வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ’யோ- யோ’ உடல் தகுதி தேர்விலும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். ஒருமுறை அந்த தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால் அரை மணி நேரம் கழித்தோ, மறுநாளோ மற்றொரு வாய்ப்பு கொடுக்க லாம். அம்பத்தி ராயுடு ’யோ-யோ’வில் அன்று தேர்வு பெறாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூர்ப் போட்டிகளில் வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரர்களை, அரை மணி நேரத் தேர்வு மூலம் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com