‘தோனி நல்ல முடிவை எடுக்க வேண்டும்’ - ஓய்வை சொல்கிறாரா கௌதம் கம்பீர்?  

‘தோனி நல்ல முடிவை எடுக்க வேண்டும்’ - ஓய்வை சொல்கிறாரா கௌதம் கம்பீர்?  
‘தோனி நல்ல முடிவை எடுக்க வேண்டும்’ - ஓய்வை சொல்கிறாரா கௌதம் கம்பீர்?  
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். 

உலகக் கோப்பைத் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில் இருந்து, தோனியின் ஓய்வு, முக்கிய பேச்சாக மாறி வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து, அவரது ஓய்வு குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அவர் ஓய்வு பெற்று விடுவது நல்லது என்று ஒரு தரப்பும், இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாம் என்று ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றன. இதில் முன்னாள் வீரர்கள் சிலரும் கூட தோனிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளவுதம் கம்பீர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “உலகக் கோப்பை 2023 தொடரை கருத்தில் கொண்டு இந்திய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எனவே தற்போது ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகியவர்களில் ஒருவர் அல்லது வேறு ஏதாவது ஒரு விக்கெட்  கீப்பருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். யாரை தேர்வு செய்தாலும் அவர்களுக்கு ஒன்றரை வருடம் வாய்ப்பளிக்க வேண்டும். அப்போது தான் அவரின் ஆட்டம் குறித்து தெரியவரும்.

ஆக, அணியின் வருங்காலம் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இதேபோன்று தோனி கேப்டனாக இருந்தபோது சிந்தித்தார். ஆஸ்திரேலியா உடனான தொடருக்கு முன்பு தோனி ஒரு முடிவை எடுத்திருந்தார். அது சச்சின், சேவாக் மற்றும் நான் ஆகிய மூவரும் அணியில் விளையாட முடியாது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் பெரிதாக இருக்கும். அத்துடன் உலகக் கோப்பை தொடரும் அடுத்து வரவுள்ளதால் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தோனி முடிவு எடுத்தார். அணியின் நலனிற்காக இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தை நாம் உணர்வு பூர்வமாக பார்க்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com