”நான் ஆழமான இடத்திற்கு தூக்கி எறியப்பட்டேன்.. என் புத்தாண்டு உறுதிமொழி இதுதான்!” - ஹர்திக்

”நான் ஆழமான இடத்திற்கு தூக்கி எறியப்பட்டேன்.. என் புத்தாண்டு உறுதிமொழி இதுதான்!” - ஹர்திக்
”நான் ஆழமான இடத்திற்கு தூக்கி எறியப்பட்டேன்.. என் புத்தாண்டு உறுதிமொழி இதுதான்!” - ஹர்திக்
Published on

இந்தியாவின் டி20 அணியின் கேப்டனாகவும், ஒருநாள் போட்டியில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட பிறகு பேசியிருக்கும் ஹர்திக் பாண்டியா, ’என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை, சாதிக்க நிறைய இருக்கிறது, முன்னோக்கிச் செல்லும் நான் பயணத்தில், நான் ஒன்றை அடைய விரும்புகிறேன்’ என்று பேசியுள்ளார்.

2023ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஒருநாள் உலகக்கோப்பையானது முழுக்க முழுக்க இந்திய ஆடுகளங்களில் நடைபெறவிருக்கிறது. 2011ல் பகுதி ஆடுகளங்களை மட்டுமே ஹோஸ்ட் செய்த இந்தியா, எதிர்வரும் உலகக்கோப்பையில் முழு போட்டிகளையும் ஹோஸ்ட் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ.

இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதற்கு, உடல்தகுதி டெஸ்ட்களாக யோ-யோ டெஸ்ட் மற்றும் டெக்சா டெஸ்ட்களை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற விதிமுறையையும் வகுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து, இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கும் இந்தியாவின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை முன்னிலைப்படுத்தியுள்ளது பிசிசிஐ. மற்றும் டி20க்க இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக செயல்பட உள்ளார் ஹர்திக் பாண்டியா. இலங்கைக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக பேசியிருக்கும் ஹர்திக் பாண்டியா, டி 20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லாத போதிலும் 2022 தனக்கு ஒரு மாயாஜால ஆண்டு என்று கூறியுள்ளார்.

இந்திய அணியில் கேப்டனாகவும், ஒரு வீரராகவும் தன்னுடைய பணி குறித்து பேசியிருக்கும் ஹர்திக் பாண்டியா, "வெளிப்படையாக, ஒரு வருடம் முன்பு, விஷயங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தது. அணியிலிருந்து வெளியில் அனுப்பப்பட்டபிறகு, மீண்டும் நான் அணிக்குள் வந்து என்னை நிலைத்துகொண்டது, எனக்கு ஒரு மாயாஜால ஆண்டாகவே இருந்தது. வெளிப்படையாக, நாங்கள் 2022 டி20 உலகக் கோப்பையை வெல்ல விரும்பினோம், ஆனால் அந்தமுடிவு வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அது நடக்கவில்லை, பரவாயில்லை ”என்று கூறினார்.

மேலும், தனது கேரியரில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று கூறிய அவர், இதுவரை தான் எதையும் சாதிக்கவில்லை என்றும் கேலியாக பேசினார். தொடர்ந்து பேசுகையில், “முன்னோக்கிச் செல்லும்போது, நான் எதை அடைய விரும்புகிறேன்? என்ற எனக்கான கேள்வியில், அடைய நிறைய இருக்கிறது. என் கிரிக்கெட் பயணத்தில் நான் எதையும் சாதிக்கவில்லை. எனவே, எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், எதிர்வரும் உலகக் கோப்பையை வெல்வதே இலக்காக இருக்கும். இந்திய அணியுடன் இணைந்து உலகக் கோப்பையை வெல்வதே இந்த புத்தாண்டின் எனது தீர்மானம். அதைவிட பெரிய தீர்மானம் எதுவும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் நோக்கம், அதைச் செய்ய முயற்சிப்போம். நாங்கள் அங்கு சென்று எல்லாவற்றையும் கொடுப்போம், அதற்கான விஷயங்கள் பிரகாசமாக இருக்கும் ”என்று பாண்டியா கூறினார்.

பெரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு வெளிவந்து இந்திய அணிக்குள் தற்போது இருப்பதை குறித்து, “எனக்கு கடின உழைப்பின் மொழி தெரியும். என் வாழ்க்கையில் எனக்கு வேறு எந்த மொழியும் தெரியாது என்று நினைக்கிறேன். நான் ஆழமான முடிவுக்கு தூக்கி எறியப்பட்டேன், என்னை மீட்டெடுத்த ஒரே விஷயம் எனது கடின உழைப்பு மட்டும் தான். கடினமாக உழைத்து, எனது உடலை நான் கவனித்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். காயங்கள் ஏற்படுவது விளையாட்டின் ஒரு பகுதியாகும், அதை என்னால் மாற்ற முடியாது. நான் என்ன செய்தேன் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், மேலும் என்னை இங்கு கொண்டு வந்த எனது கடின உழைப்பு மற்றும் அதற்கான செயல்பாட்டில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். முன்னோக்கிச் செல்லும் பயணத்தில், காயங்களை வெளியே வைத்து, சிறப்பாக விளையாட எனது உடலுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்க விரும்புகிறேன்”என்று பாண்டியா மேலும் கூறினார்.

இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை ஜனவரி 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு எதிர்கொண்டு விளையாடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com