இன்று துபாயில் இறங்கிய ஆர்.சி.பி அணி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதில் கோலி காணப்படவில்லை. மேலும் அவர் சொந்தமாக பயணம் செய்யலாம் என ரசிகர்கள் யூகித்துக்கொண்டிருந்த நிலையில், '’ஹலோ துபாய்’’ என விராட் கோலி ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் தனியாகச் சென்றாரா அல்லது சக வீரர்களுடன் சென்றாரா என்பது தெரியவில்லை.
விதிகளின்படி, அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இந்தக் காலக் கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற சோதனை முடிவை பெற்றபின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த வாரம் சாஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் பெங்களூருவுக்கு சென்றபோது கோலி செல்லவில்லை. அவர்களை அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்திய பிறகு யு.ஏ.இக்கு பறந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற 5 அணிகள் ஏற்கெனவே யு.ஏ.இ க்கு சென்றுவிட்ட நிலையில், இன்று ஆறாவதாக ஆர்.சி.பி அணியும் இறங்கியுள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளும் நாளை செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விதிகளின்படி ஆகஸ்ட் 20க்குள் உரிமையாளர்கள் தளத்தைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஐ.பி.எல் 13வது போட்டித் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 20 வரை நடைபெறும். இந்தியா 2020/21க்கான முழு அளவிலான தொடரை தொடர்ந்து விளையாட உள்ளதால், நீண்டகாலமாகவே தங்கள் வீடுகளை விட்டு விலகி இருக்கின்றனர். அவர்கள் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படவுள்ளனர். சீசன் நவம்பரில் தொடங்கவுள்ளது.