ரமலான் நோன்பிற்கு பின்னால் இவ்வளவு அற்புதமான காரணங்களா! ஆச்சர்யப்பட வைக்கும் பழக்க வழக்கங்கள்!

ரமலான் நோன்பு மனிதனுக்கு ஒழுக்க பயிற்சிகளை கற்றுக்கொடுக்கிறது; மனிதன் தாகமாகவும், பசியுடன் இருக்கிறான் என்பதை இறைவன் மட்டுமே அறிந்து கொள்ள முடியும், அருகில் இருக்கும் மக்களுக்கு தெரியாது.
ரமலான் நோன்பு
ரமலான் நோன்புபுதிய தலைமுறை
Published on
"எவன் ஒருவன் ரமலான் விரதத்தை தீவிரமாக இருக்கிறானோ அவன் இறைவனின் மதிப்பைப்பெறுவான்"

நோன்பு எல்லா மதத்திலும் கடைப்பிடிக்கக்கூடிய ஒன்று. இதில் இஸ்லாமியர்களின் நோற்கும் ரமலான் நோன்பின் சிறப்பு என்ன? அதனால் ஏற்படும் நன்மை என்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சகோதர்களுக்கு கடந்த மார்ச் 24ம் தேதி ரமலான் நோன்பானது துவங்கப்பட்டது. ரம்ஜான் நோன்பு என்பது உலகம் முழுதும் கொண்டாடப்படும் இஸ்லாமிய பண்டிகைகளில் முக்கியமானதாகும். இஸ்லாமில் குறிப்பிடப்படுகின்ற முக்கிய ஐந்து தூண்களில் ஒன்றாக இந்நோம்பானது கடைப்பிடிக்கப்படுகிறது. ஸ்லாத்( தொழுகை) ஷஹாதா (ஒரே ஒரு கடவுளை தவிர வேறு யாருமில்லை; கடவுளின் தூதர் நபிகள் நாயகம் முஹம்மது) ஜகாத்(தர்மம்) ஹஜ் (புனிதபயணாம்) ரமலான்(நோன்பு) என்பவை இஸ்லாமியர்களின் ஐந்து தூண்கள் ஆகும்.

நோன்பு சமயத்தில் நல்வழிகளை பின்பற்றவேண்டும், தானங்கள், தொண்டுபுரிதல் வேண்டும். வேளை தவறாமல் தொழுவது மட்டும் அல்லாமல், தீய பழக்கங்களை அறவே நிறுத்தி திருக்குரானை வாசித்து அதில் சொல்லப்பட்டது போல் நடந்து அல்லாவின் ஆசியை பெறவேண்டும்

இந் நோன்பை ஏற்பவர்கள், விடியற்காலை முதல் அந்தி நேரம் வரை உணவு, பானங்கள் மற்றும் பிற இன்பங்களிலிருந்து விலகி இருப்பார்கள், இந்நோன்பில் அவர்களின் நோக்கமானது, ஆன்மீகம், பிராத்தனை தொண்டு ஆகியவற்றில் கவனமானது சிதறாமல் இருக்கும்.

இந்த மாதத்தில் தான் திருக்குரானானது தோன்றியதாகக் கூறப்படுவதால், இஸ்லாமியர்கள் அதனை போற்றும் விதமாக, இந்த மாதத்தில் நோன்பு இருந்து வருகிறார்கள்.

திருக்குரானின் படி, இந்த ஒருமாத நோன்பின் பயிற்சி காலமானது அடுத்து வருகின்ற 11 மாதங்களை செயல் படுத்துவதற்காக இறைவன் அளித்த காலகட்டம் என்றும், இந்த சமுதாயமானது அனைவருக்கானதுமானது, இது வாழ்க்கையின் வழிகாட்டி சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டும் ஒரு வேதமாக இந்நோம்பானது இருக்கிறது என்றும், ஒரு ஆன்மாவிலிருந்து இறைவன் மனித சமூகத்தை படைத்து இருக்கிறான், என்று மனித சமூகத்தின் துவக்கத்தை பற்றிய ஒரு தெளிவான வழிகாட்டுதலை திருக்குரான் கூறுவதாக கூறுகிறார்கள்.

மேலும், மனிதர்கள் அனைவரும் சமம் . முதல் மனிதன் தான் முதல் தூதர் அவன்தான் வழிகாட்டலை கொடுத்தான் என்ற செய்தியும் குரானில் கூறியிருக்கிறது. எல்லா சமூகங்களிலும் இறை தூதர்கள் வந்தார்கள் இவர்கள் அனைவரையும் நம்ப வேண்டும். இந்த பட்டியலில் இறுதியாக வந்தவர் தான் நபிகள் நாயகம் என்று குர்ஆன் கூறுவதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

குர் ஆனின் முக்கியமான பங்களிப்பு என்னவென்றால் மனிதர்களுக்கு நல்லது எது கெட்டது எது தெளிவாக எடுத்துரைக்கிறது, குறிப்பாக மது, சூது, வட்டி, ஓரின சேர்க்கை தவறான பழக்க வழக்கங்கள், மோசடி செய்வது போதை பொருட்கள் இவைகளை எல்லாம் தடை செய்கிறது. குர்ஆனுடைய இன்னொரு முக்கியமான பங்களிப்பு என்னவென்றால் மனிதர்களின் உரிமைகளையும் கடமைகளையும் எடுத்து சொல்லிருக்கிறது. அதாவது, கணவன் மனைவிக்கு இடையிலான உரிமை என்னவாக இருக்க வேண்டும் அவ்வாறு பெற்றோர்கள் நண்பர்கள் பயணிகள் தொழிலாளிகள் என ஒவ்வொருத்தரும் தங்களுடைய உரிமைகள் என்ன? அவர்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? அவர்கள் பெற வேண்டிய உரிமை என்ன? என்பதையும் திருக்குர்ஆன் கூறியுள்ளது. நாம் எங்கிருந்து வந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? எங்கு செல்ல போகிறோம்? எந்த உலகத்திற்கு பிறகு இன்னொரு உலகம் இருக்கிறதா? அது எவ்வளவு முக்கியமானது அதன் உண்மை தன்னை என்ன? என்பதையும் குர்ஆன் கூறுகிறது. இந்த உலகம் ஒரு சோதனை களம், நல்லவர்களுக்கு சொர்க்கம் உண்டு , தீயவர்களுக்கு தண்டனை உண்டு எனவும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. தெளிவான வழிகாட்டலை கொடுத்த இந்த வேதத்திற்கு நன்றி செலுத்துவதற்கு தான் ரமலான் மாதத்திலே நாம் நோன்பு வைக்கின்றோம் என்று குரானில் கூறப்பட்டுள்ளதாக இஸ்லாம் மதத்தினர். நம்புகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com