திவ்ய தேசம் 9: ‘ஆதிமூலமே... என்னை காப்பாற்றும்...’- பாகவதம் சொல்லும் கபி தலத்தின் வரலாறு!

“நீ யானையாக பிறந்தாலும் ஒரு முதலையானது உனது காலை பிடித்துக்கொள்ளும்; அந்த சமயம் பெருமாள் வந்து உன்னை காப்பாற்றுவார்”
கஜேந்திர மோட்ஷம்
கஜேந்திர மோட்ஷம்PT Desk
Published on

108 திவ்ய தேசத்தில் இன்று 9 தலமான கபிஸ்தலம் பற்றி தான் பார்க்கப் போகிறோம். 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட திருத்தலம் இது.

திருமழிச்சை ஆழ்வாரால் பாடப்பட்ட ஸ்தலம். இது தஞ்சாவூருக்கு அருகே உள்ள பாபநாசத்தில் உள்ளது.

இது கபி தலம் அல்லது கவித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர் : கஜேந்திர வரதர், ஆதிமூல பெருமாள், கண்ணன்

உற்சவர்: செண்பகவல்லி தாயார்.

தல விருட்சம் : மகிழம்பூ

தீர்த்தம் : கஜேந்திர புஷ்கரணி கபில தீர்த்தம்

இங்கு ஹனுமன் கஜேந்திரமோட்சத்தை காணவேண்டி தவம் இருந்ததால் கபிதலம் என்றும்m இது அழைக்கப்படுகிறது.

இந்த கஜேந்திரமோட்சம் என்னவென்று பார்க்கலாம்.

பாகவதத்தில் வரும் ஒரு சுவையான வரலாறு:

இந்திரஜூம்னன் என்ற பாண்டிய நாட்டு அரசன் ஒரு விஷ்ணு பக்தன். ஒருமுறை அவன் தவத்தில் இருந்தபொழுது துர்சாச முனிவர் அவ்விடம் வந்தார். ஆனால் வந்திருப்பது துர்வாசர் என்று தெரிந்தும், இந்திரஜூம்னன் அவரை உபசரிக்கவில்லை. ஆகவே துர்வாசருக்கு கோபம் வந்து நீ யானையாக பிறப்பாய் என்று சாபமிட்டார். துர்வாசரின் கோபத்தைக்கண்ட இந்திரஜூம்னன் அவரிடம் மன்னிப்புக்கோரி சாபவிமோசனம் கேட்டான்.

துர்சாசரும் அவன் மீது இரக்கம் கொண்டு, நீ யானையாக பிறந்தாலும் ஒரு முதலையானது உனது காலை பிடித்துக்கொள்ளும். அந்த சமயம் பெருமாள் வந்து உன்னை காப்பாற்றுவார். அக்கணமே நீ சாபம் நீங்கி முக்தியும் பெருவாய் என்றார்.

சரி அப்படி என்றால் முதலைக்கும் ஒரு கதை இருக்கவேண்டும் தானே... ஆம் அதையும் பார்க்கலாம்.

கூஹூ என்ற அரக்கன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது... அதாவது தண்ணீரில் இறங்கி குளிப்பவர்களின் காலை இழுத்து அவர்களை கொன்று விடுவான். ஒரு சமயம் அகஸ்திய முனிவர் ஆற்றில் இறங்கிய சமயம், தண்ணீரில் மறைந்திருந்த கூஹூ அரக்கன் அகஸ்தியரின் காலைப்பிடித்து இழுத்தான். இவன் அரக்கன் என்று தெரிந்ததும் அகஸ்தியர் அவனுக்கு நீ முதலையாக மாறுவாய் என்று சாபமிட்டார்.

இப்படி மறு ஜென்மத்தில் கூஹூ அரக்கன் முதலையாகவும் இந்திரஜூம்னன் யானையாகவும் பிறந்தார்கள்.

ஒரு சமயம் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக தாமரையை பறிக்க வந்த யானையின் காலை, அங்கு காத்திருந்த முதலையானது பிடித்துக்கொண்டது. யானை, முதலையின் வாயிலிருந்து விடுவிக்கப்பார்த்தது. இயலவில்லை. கடைசியாக “ஆதிமூலமே... என்னை காப்பாற்றும்” என்று யானை அழைத்ததும், இதற்காக காத்திருந்த பகவான் கருட வாகனத்தில் வந்து முதலையை அழித்து யானையை ரக்‌ஷித்ததாக ஒரு புராணம் உண்டு.

கஜேந்திர மோட்ஷம்
கஜேந்திர மோட்ஷம்

இது நடந்த இடமாக பீகார் மாநிலம் பக்ஸர் என்ற இடத்தில் சோன்பூர் என்ற ஊர் சொல்லப்படுகிறது. ஆனால் அத்தரிசனத்தை இவ்விடத்தில் (கபிஸ்தலம்) இருந்தபடி ஹனுமன் தரிசிக்க ஆசைப்பட, அவரின் ஆசைக்கு இணங்கிய பெருமாள் இவ்விடம் வந்து ஹனுமனுக்கு காட்சி கொடுத்த ஸ்தலம் இதுவென புராணங்கள் சொல்கின்றன.

கஜேந்திர மோட்ஷம்
திவ்ய தேசம் - 8: தஞ்சாவூர் வையம் காத்த பெருமாள் திருத்தலத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதையா?
கஜேந்திர மோட்ஷம்
திவ்ய தேசம்-7: சிவனின் பிரம்மஹஸ்தி சாபம் நீங்கிய, திருமங்கை ஆழ்வார் பாடிய கண்டியூர் ஸ்தலம்!
கஜேந்திர மோட்ஷம்
திவ்யதேசம் - 6: நம்மாழ்வார் பாடிய அப்பக்கூடத்தான் ஸ்தலத்தின் புராணக் கதை
கஜேந்திர மோட்ஷம்
"நாகத்தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்"- திருமழிசை ஆழ்வார் பாடிய ’திருஅன்பில்’ கோயில்..திவ்ய தேசம்-5!
கஜேந்திர மோட்ஷம்
திவ்ய தேசம்-4 : “சிபி நீ வருவாய் என்று எனக்கு தெரியும்”புற்றிலிருந்து வெளிவந்த புண்டரீகாட்சனின் கதை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com