மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் போல் தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 5 ஆம் நாளான நேற்று மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Madurai Meenakshi amman
Madurai Meenakshi ammanpt desk
Published on

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 ஆம் நாளான நேற்றிரவு மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினர். அப்போது பல்வேறு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றன.

chitrai Festival
chitrai Festivalpt desk

பொதுவாக கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிலையில் கள்ளழகரை போலவே மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. அப்படி சுவாமியும் அம்மனும் நேற்று இரவு தெற்கு மாசி, மேலமாசி, வடக்குமாசி, கீழமாசி என நான்கு மாசி வீதிகளிலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Meenakshi amaman
Meenakshi amamanpt desk

சுவாமியும் அம்மனும் வீதியுலா வந்தபோது மாசி வீதி முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரு புறங்களிலும் வரிசையில் நின்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தனர். இந்த வீதியுலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடமணிந்தும் சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் ஊர்வலமாக சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com