திவ்ய தேசம் 10 | ‘முன்னோரின் ஆசியை பெற்றுத்தரும்’ திருபுள்ளபூதங்குடி ராமர் கோயில்!

“நான் இங்கே இருப்பது தெரியாமல் திருமங்கை ஆழ்வார் கடந்து சொல்கிறாரே.... ” என்று நினைத்தவர் சடாரென்று சங்கு சக்கரத்துடன் அவருக்கு காட்சி கொடுத்துள்ளார்.
ஜடாயு
ஜடாயுPT
Published on

திருபுள்ளம்பூதங்குடி பெயர் விளக்கம்: புள் - பறவை, அம் - அழகிய, பூதம் - சரீசம். அதாவது, பறவையின் அழகிய பூத உடல். அதுதான் ஜடாயு. இதற்கு ஈமசடங்கு செய்த இடம் என்பதாலேயே இந்த இடம் திருபுள்ளம்பூதங்குடி எனப்படுகிறது.

அப்படி என்றால், நாசிக் பஞ்சவடியில் (ராமாணயத்தில் சொல்லப்படும் ஜடாயு மோட்ச வரலாற்று இடம்) இருப்பது...?

ராமாயணத்தில் வரும் நாசிக் பஞ்சவடி அருகில் இருக்கும் தாகியத் என்ற இடத்தில் ஜடாயுக்கு மோட்சம் தந்ததாக புராணாங்கள் கூறுகின்றன. ஆனால் திருபுள்ளம்பூதங்குடியில் ரிஷிகள் பிராத்தனை செய்து தங்களின் மனக்கண்களால் அக்காட்சியைக் கண்டதால் (ஜடாயு மோட்சம் பெற்றதை) இத்தலத்திற்கும் அத்தகைய பெருமை கிடைக்கிறது.

இங்கு ராமர் சயனித்த திருக்கோலத்தில் உள்ளார்.

மூலவர்: வல்வில் ராமன்

தாயார் : பொற்றாமரையால் ஹேமாம்புஜவல்லி

விமானம்: சோபன விமானம்

தலவிருட்சம்: புன்னை மரம்

தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம்

புராண பெயர்: பூதப்பொரி

ஊர்: திருப்புள்ளபோதக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் இது. அதன்படி இங்கு “அறிவதறியா நனைத்துலகும் உடையானென்னை யாளுடியான்” என்று தொடங்கும் பாசுரத்தை திருமங்கை ஆழ்வார் இயற்றி உள்ளார்.

இத்திருத்தலத்தில் ராமர் சயணித்தபடி காட்சி தருகிறார். சோழர்களால் நிர்மாணம் செய்யப்பட்ட திருத்தலம் இது.

பொதுவாக எல்லா இடங்களிலும் ராமர் வில் ஏந்தியபடி தான் காட்சி அளிப்பார். ஆனால், இத்தளத்தில் ஓய்வெடுக்க வேண்டி அவர் சயணித்த சமயத்தில் திருமங்கை ஆழ்வார் இங்கு வந்துள்ளார். படுத்திருப்பது ராமர் என்று அறியாமல் அவரை கடந்த சென்றதும், ராமர் “நான் இங்கே இருப்பது தெரியாமல் திருமங்கை ஆழ்வார் கடந்து சொல்கிறாரே....” என்று நினைத்தவர் சடாரென்று சங்கு சக்கரத்துடன் அவருக்கு காட்சி கொடுத்துள்ளார். இதை கண்ட திருமங்கையாழ்வார் “அறிய வேண்டியதை அறியாமல் சென்றேனே” என பத்து பாசுரத்தை இயற்றி இருக்கிறார்.

ஜடாயுவின் கதை

ஜடாயுவுக்கு மிகவும் வயதாகி காட்டில் வாழ்ந்து வந்த சமயம், ராவணன் சீதையை ஏமாற்றி, அவளை புஷ்பக விமானத்தில் கடத்தி கொண்டு சென்றது. அச்சமயம், ஜடாயு ராவணனுடன் போரிட்டு சீதையை காப்பாற்ற நினைத்தது. ஆனால் ராவணன் தனது வாளால் அதன் இறக்கை இரண்டையும் வெட்டி விட்டான். அதனால் சீதையை காப்பாற்ற இயலவில்லை. வலியில் முனங்கியபடி இருந்தது. அச்சமயம் சீதையைத் தேடி அவ்வழி வந்த ராமரும் லெட்சுமணனும் ஜடாயுவின் அருகில் சென்று பார்த்தனர்.

ஜடாயுவும் ராவணன் சீதையை கடத்தி சென்ற விவரத்தை கூறி, “ராமா... என்னால் காப்பாற்ற இயலவில்லை மன்னித்து விடு..” என்று கூறி உயிரை விட்டது. அப்பொழுது தான் சீதை ராவணனால் கடத்தப்பட்ட விவரம் ராமனுக்கு தெரியவந்தது. தன் தந்தை உயிர் நீத்த சமயம் தன் தந்தைக்கு ஈமக்காரியங்கள் செய்ய இயலவில்லை என்ற வருத்தம் ராமருக்கு இருந்தது. அதனால் தன் தந்தையின் ஸ்தானத்தில் ஜடாயுவை நினைத்து அதற்கு ஈமக்காரியத்தை நிகழ்த்த விரும்பினார். ஆனால் தர்மபத்தினியான சீதை இல்லாமல் எவ்வாறு ஈமகாரியங்கள் செய்வது என்று நினைத்த ராமன், மானசீகமாக மனதில் சீதையை நினைத்து, பொன்னால் ஆன சீதையின் உருவத்தை அருகில் வைத்து ஜடாயுக்கு ஈமகாரியங்கள் செய்ததாக புராணாங்கள் கூறுகிறது.

இந்த நிகழ்வைக் கொண்டு இத்திருத்தலமானது திவ்யதேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. பிருத்துக்களின் பரிகார ஸ்தலம் இது. அதாவது இங்கு முன்னோர்களுக்கு பரிகாரம் செய்தால் அவர்களின் ஆசியானது கிடைக்குமாம். திருமணத்தடைகள் நீங்கும் இடமென்ற பெருமையும் இங்கு உள்ளதாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com