"நாகத்தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்"- திருமழிசை ஆழ்வார் பாடிய ’திருஅன்பில்’ கோயில்..திவ்ய தேசம்-5!

திருமணதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசணம் செய்தால் திருமணத்தடை நீங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு.
அன்பில் சுந்தரராஜப்பெருமாள்
அன்பில் சுந்தரராஜப்பெருமாள்அன்பில் சுந்தரராஜப்பெருமாள் file image
Published on

திவ்ய தேசத்தில் இன்று நாம் காணப்போகும் 5 வது திருக்கோயில் திருஅன்பில்.

இங்கு மூலவரின் பெயர்: சுந்தரராஜப்பெருமாள்.

உற்சவரின் பெயர்: வடிவழகிய நம்பி, அனிருத்ர மூர்த்தி

விமானம்: தாரகவிமானம்

தாயாரின் பெயர் அழகியவல்லி

ஸ்தல விருட்சம் : தாழம்பூ

தீர்த்தம்: மண்டுக தீர்த்தம்

இத்திருக்கோயில் திருச்சிக்கு அருகில் இருக்கிறது. ஆழ்வார்களில் ”திருமழிசை ஆழ்வார் இத்திருத்தலத்தை பற்றி நாகத்தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத்தணையரங்கம்” என்று தொடங்கும் பாசுரத்தை ஏற்றி உள்ளார். இப்பிரகாரத்தை சுற்றி நரசிம்மர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உண்டு. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்திலும் நின்ற கோலத்திலும் காட்சி தருகிறாள். ஒவ்வொரு மாத பௌர்ணமி இரவும் கொள்ளிடத்தில் இப்பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைப்பெற்று வருகிறது.

புராணக்கதை:

இவ்விடத்தில் ஒரு ரிஷிகாவிரி ஆற்றில் தண்ணீருக்கு அடியில் தவம் செய்துக்கொண்டிருந்த சமயம், அவ்வழியாக துர்வாசமுனிவர் வந்தாராம். துர்வாச முனிவர் இயற்கையிலேயே முன்கோபி. அவர் வந்ததை தண்ணீருக்கு அடியில் அமர்ந்து தவம் செய்து வந்த ரிஷி கவனிக்கத்தவறி விட்டார். ஆகவே கோபமடைந்த துர்வாசர் ரிஷிக்கு சாபம் ஒன்றை அளித்தார். “நான் வந்ததை கவனிக்காமல் நீ தண்ணீருக்கு அடியில் அமர்ந்து இருக்கிறாய். ஆகையால் நீ மண்டூகனாக பிறப்பாய்” என்றார்.

ரிஷியும் , துர்வாசரின் சாபத்தால், மண்டூகனாக (தவளை) பிறந்து இத்திருத்தலத்திற்கு வந்து சாபவிமோஷனம் அடைந்ததாக ஒரு புராணாக்கதை உண்டு. அந்த ரிஷிதான் மண்டூக முனிவர். அவர் தண்ணீருக்கு அடியில் தவம் இருந்த இடம் மண்டூக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

புராணத்தில் வேரொரு கதையும் இருக்கிறது.

ஒருமுறை பிம்மனுக்கு தான் மிக அழகானவர் என்ற கர்வமுடன் இருந்தார். அதனால் பிரம்மாவுக்கு அந்த கர்வம் அழியும் பொருட்டு விஷ்ணு அவருக்கு பூளோகத்தில் மானிடனாய் பிறக்கவைத்தார். பிரம்மாவும் பூளோகத்தில் அழகான மானிடனாய் பிறந்தார். வயது ஆக ஆக... அந்த அழகானது குறைய ஆரம்பித்தது. அப்பொழுது இவரை விட அழகான ஒரு ஆடவனை பார்த்த பிரம்மா... இவர் நம்மை விட அழகாக இருக்கிறாரே.... நாம் தான் அழகு என்ற ஆணவத்தில் இருந்தோமே... என்று பிரம்மாவின் ஆணவம் அழிந்த சமயம் அங்கு அழகான ஆடவராய் வந்த சுந்தரராஜப்பெருமாள் அவருக்கு காட்சி தந்தார். என்ற வரலாறும் உண்டு.

இத்திருத்தலம் சோழர்கள் காலத்தில் புரணமைப்பு செய்யப்பட்டது. திருமணதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசணம் செய்தால் திருமணத்தடை நீங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு. திருஅன்பில் திருத்தலம் சென்று சுந்தரராஜப்பெருமாளின் அருளினைப்பெருவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com