ஒன்பது மட்டுமல்ல.. விஷ்ணு பகவானின் 20 அவதாரங்கள் என்னென்ன என்பது தெரியுமா?

நமக்கு பொதுவாக மச்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணர் என்ற ஒன்பது அவதாரங்கள் தான் தெரியும். ஆனால் விஷ்ணு பகவான் இதுவரை 20 அவதாரங்கள் எடுத்துள்ளார் என சில புராணங்கள் சொல்கின்றன.
ஸ்ரீமன் நாராயணன்
ஸ்ரீமன் நாராயணன்PT
Published on

விஷ்ணு பகவானது அவதாரங்கள் என்னென்ன என்பது தெரியுமா?

நமக்கு பொதுவாக மச்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணர் என்ற ஒன்பது அவதாரங்கள் தான் தெரியும். ஆனால் விஷ்ணு பகவான் இதுவரை 20 அவதாரங்கள் எடுத்துள்ளார் என சில புராணங்கள் சொல்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஒரு கல்பம் முடிந்தபின் மீண்டும் உலகத்தை படைக்க எண்ணிய பகவான் நாராயணன், பிரளய காலத்தில் ஜலத்தில் (தண்ணீர்) பள்ளி கொண்டு யோக நித்திரையில் இருந்தார். அப்பொழுது அவரது தொப்புள் கொடியில் தோன்றிய தாமரை மலரில் உலகத்தை படைக்கும் வேலையைக்கொண்ட பிரம்மா தோன்றினார் என்பது எல்லாரும் அறிந்ததே...

பிறகு பிரம்மாவின் மூலமாக பகவான் நாராயணன் எடுத்த அவதாரங்கள் எவை எவை என்பதை பார்க்கலாம்.

தனது முதல் அவதாரமாக பகவான் வாசுதேவனே ஸனத்குமாரர், சனகர், சதானந்தர், சனாதனர் ( ஸனகாதி முனிவர்கள்) ஆகிய அவதாரத்தை மேற்கொண்டார்.

இரண்டாவது அவதாரமாக பாதாளத்தில் மூழ்கிய பூமியை மேலே கொண்டுவருவதற்காக வராக அவதாரத்தை மேற்கொண்டார்.

மூன்றாவது அவதாரமாக தேவரிஷி நாரதர் ஆக அவதாரம் செய்து பாஞ்சராத்ரம் என்ற ஆகம சாஸ்திரத்தை கூறினார்.

நாலாவது அவதாரமாக தர்ம பிரஜாபதியின் மனைவியான மூர்த்தி என்பவளிடம், நரன், நாராயணன் என்ற ரிஷியாக அவதாரம் செய்தார்.

ஐந்தாவது அவதாரமாக கபிலராக திரு அவதாரம் செய்தார்.

ஆறாவது அவதாரமாக அத்திரி மகரிஷியின் பத்தினியான அனுசுயா வயிற்றில் தத்தாத்ரேயர் என்ற பெயரோடு திரு அவதாரம் செய்தார்.

ஏழாவது அவதாரமாக ருசி என்ற பிரஜாபதியின் மனைவியான ஆகூதி என்பவளிடம் "யக்ஞன் "என்ற பெயரோடு திருஅவதாரம் செய்தார்.

எட்டாவது அவதாரமாக நாபியின் மனைவியான மேரு தேவியின் வயிற்றில் ரிஷபதேவர் என்ற பெயருடன் திரு அவதாரம் செய்தார்.

ஒன்பதாவது அவதாரமாக "பிருது" என்ற பெயருடன் அரசனாக இப்பூமியில் அவதாரம் செய்தார்.

பத்தாவது அவதாரமாக சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் ஏற்பட்ட மகா பிரளயத்தில் மத்ஸ்ய அவதாரம் எடுத்தார்.

பதினோராவது அவதாரமாக தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தை கடையும் பொழுது கூர்ம அவதாரம் எடுத்து மத்தாக நின்ற மந்திர மலையை தன் முதுகில் தாங்கினார்

பன்னிரண்டாவது அவதாரம் தன்வந்திரி

பதின்மூன்றாவதாக "மோகினி" என்ற பெண் உருவம் தாங்கி அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமுதத்தை வழங்கினார்.

பதினான்காவதாக நரசிம்ம அவதாரம் எடுத்து மிகுந்த பலம் வாய்ந்த அசுரர் தலைவனான இரண்யகசிபுவை வதம் செய்தார்

பதினைந்தாவதாக வாமன அவதாரம் செய்து அவர்கத்தை மகாபலியிடம் எழுந்து திரும்பி பெற விரும்பி மூன்றடி மண் அவனிடம் யாசகம் கேட்டார்.

16-ஆவது ஆதாரமாக பரசுராம அவதாரம் செய்தார்.

பதினேழாவது அவதாரமாக "வியாசர் " ஆக (மகாபாரதம், பாகவதத்தை எழுதியவர்) பராசரருக்கும் சத்தியவதிக்கும் மகனாக பிறந்தார்.

பதினெட்டாவது அவதாரமாக ராம அவதாரம் செய்தார்

பத்தொன்பது, இருபது அவதாரமாக யது குலத்தில் பலராமன், கிருஷ்ணன் என்ற பெயர்களில் திரு அவதாரம் செய்தார்.

இருபத்தி ஒன்றாம் அவதாரமாக கலியுக தொடக்கத்தில் கீகடம் என்கிற மகத ராஜ்யத்தில் அஜனன் என்பவரின் மகனாக "புத்தர் " என்ற பெயருடன் திரு அவதாரம். (அதாவது, புத்தர் பிறப்பதற்கு முன்பாக பாகவதத்தில் இது கூறப்பட்டுள்ளது)

இனி, அரசர்கள் திருடர்கள் போல் கொள்ளையர்களாக ஆகும்பொழுது பகவான் "விஷ்ணுயசஸ்" என்ற அந்தணனுக்கு கல்கி என்ற திருப்பெயருடன் திருவதாரம் செய்யப்போகிறார்.

இப்படியாக மொத்தம் இருபத்திரண்டு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்களில் கூறபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com