சித்திரை திருவிழா ஆறாம் நாளான நேற்று மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை அம்மனும், அன்னை மீனாட்சியும் தங்கம், வெள்ளி ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் எழுந்தருளி அருள் பாலித்தனர். இதை பக்தர்கள் கண்டு களித்தனர். இதன் ஒரு நிகழ்சியாக சைவசமய ஸ்தபித வரலாற்று கதைகள் அரங்கேற்றப்பட்டன.
மதுரையின் பெரும் திருவிழாக்களில் ஒன்று சித்திரைத்திருவிழா. இந்த திருவிழாவில், அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்து நடக்கும் சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் விழாவாக சிவனும் மீனாட்சியும் கோயிலுக்குள்ளேயே இருக்கும் சிவகங்கை ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்பொழுது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக பாடப்படும். இந்த நிகழ்விற்கு பெயர் சைவசமய ஸ்தபித வரலாற்று லீலை நிகழ்வு என்று பெயர்.