புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் புழல் சிறைக்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.