புதிய தேர்தல் ஆணையர் நியமனம் விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தை பீகாரின் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடுமையாகச் சாடியுள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சர்ச்சை தொடரும் நிலையில், தேர்தல் ஆணையரான கியானேஷ் குமாருக்கு தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு புதிய ஆணையரைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது