அமெரிக்க நாடாளுமன்றத்தில் என்ன பேசப்போகிறார் செலன்ஸ்கி?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் என்ன பேசப்போகிறார் செலன்ஸ்கி?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் என்ன பேசப்போகிறார் செலன்ஸ்கி?
Published on

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நாளை உரையாற்ற உள்ளார்.

ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொளி முறையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நாளை உரையாற்ற உள்ளார். இந்த உரை அமெரிக்க மக்களுக்கும் நேரலையில் ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை காக்க போராடிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் தலைவர் தங்கள் அவையில் பேசுவது பெருமைக்குரியது என நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். செலன்ஸ்கி இம்மாத தொடக்கத்திலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொளி முறையில் பேசியிருந்தார்.

இதேபோல இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் செலன்ஸ்கி பேசியிருந்தார். ரஷ்ய படைகளை சமாளிக்க ஆயுதங்களை வாங்க அமெரிக்கா அண்மையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளது. தங்கள் நாட்டை மறுசீரமைக்க பெரும் தொகை தேவைப்படுவதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியிருந்தார். இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வீடியோ அழைப்பு மூலம் சுமார் ஒன்றரை மணி தற்போதைய சூழல் குறித்து ஆலோசித்தார். ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இஸ்ரேல் நெருக்கமான நாடாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com