"இனிதான் உக்ரைனுக்கு மோசமான காலக்கட்டம்" - பிரான்ஸ் அதிபரின் திடுக்கிடும் தகவல்

"இனிதான் உக்ரைனுக்கு மோசமான காலக்கட்டம்" - பிரான்ஸ் அதிபரின் திடுக்கிடும் தகவல்
"இனிதான் உக்ரைனுக்கு மோசமான காலக்கட்டம்" - பிரான்ஸ் அதிபரின் திடுக்கிடும் தகவல்
Published on

உக்ரைனில் "மோசமான நிலை வரப்போகிறது" என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடந்த 90 நிமிட தொலைபேசி உரையாடலுக்கு பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய பிரான்ஸ் அதிபரின் பெயர் குறிப்பிடப்படாத உதவியாளர், "புடின் உக்ரைன் நாட்டின் முழுமையையும் கைப்பற்றும் நோக்கத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அவரிடம் பேசியதின் அடிப்படையில், உக்ரைனில் மோசமான நிலை வரப்போகிறது என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு. ரஷ்ய ஜனாதிபதி புடின் எங்களிடம் கூறியதில் எங்களுக்கு உறுதியளிக்கும் வகையில் எதுவும் இல்லை. உக்ரைனை 'டி -நாசிஃபை' செய்யும் தனது நடவடிக்கையை இறுதிவரை மேற்கொள்வதில் அவர் உறுதியாக உள்ளதாக சொன்னார் " என்று கூறினார்.

மேலும், "பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், மனிதாபிமான அணுகலை அனுமதிக்கவும் புடினை மக்ரோன் வலியுறுத்தினார்.தான் இதற்கு ஆதரவாக இருப்பதாக புடின் பதிலளித்தார், ஆனால் எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை. ரஷ்ய இராணுவம் உக்ரைனில் உள்ள குடிமக்களின் கட்டமைப்பை குறிவைப்பதையும் புடின் மறுத்துள்ளார்.

ஜனாதிபதி புடின் மிகவும் சமநிலையுடனும் மற்றும் மிகவும் தெளிவான ரீதியாகவும் பேசும் முறையைக் கொண்டுள்ளார். அவர் சில நேரங்களில் பொறுமையின்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறார், ஆனால் அடிப்படையான வார்த்தை பரிமாற்றங்களின் போது பதற்றத்தின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com