ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவைவிட, இந்தியா கொண்டுள்ள உறவு வேறுபட்டது, புரிந்து கொள்ளக்கூடியது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ், இந்தியாவுடன் அமெரிக்கா முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதாகவும், இந்தியாவின் கருத்துகளை மதிப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா கொண்டுள்ள அளவுக்கு, அமெரிக்கா ரஷ்யாவுடன் உறவு வைத்திருக்கவில்லை என்ற அவர், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றார்.
பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ரஷ்யா, இந்தியா இடையேயான உறவு புரிந்து கொள்ளக்கூடியதே என்றும் ப்ரைஸ் தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் மீது இந்தியா நடுநிலை வகித்த நிலையில் அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.