உக்ரைன் போர் - ரஷ்யாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் எவை?

உக்ரைன் போர் - ரஷ்யாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் எவை?
உக்ரைன் போர் - ரஷ்யாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் எவை?
Published on

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் வேலையில் ரஷ்யாவில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற தொடங்கி இருக்கின்றன. பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கிய சந்தையை போர் தொடங்கிய சில நாட்களில் வெளியேற பல நிறுவனங்கள் முடிவெடுத்திருக்கின்றன. நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பல முதலீட்டாளர்களும் வெளியேறி இருக்கிறார்கள்.

எக்ஸான், பிபி, ஷெல், டோட்டல், சீமென்ஸ், ஏபிபி, போர்டு, ஜிஎம், ஏர்பஸ், போயிங், ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர், நெட்பிளிக்ஸ், ஸ்பாட்டிபை, அடிடாஸ், ஹார்லி டேவிட்சன், வோல்வோ, பென்ஸ், டொயோடா, ஹோண்டா, ரெனால்ட், ஜாகுவார், டெல், பெடக்ஸ் ,ஏர்பிஎன்பி உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியேறி அல்லது செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி இருக்கின்றன.



நிதி சேவை பிரிவில் ஹெச்.எஸ்.பி.சி. ஐஎன்ஜி, பென்ஷன் பண்ட்கள், விசா, மாஸ்டர் கார்டு ஆகியவையும் வெளியேறி இருக்கின்றன. மேலும் ஐகேஇஏ, ஹெச் அண்ட் எம், நைக், டிஸ்னி, டிக்டாக் என பல நிறுவனங்கள் சேவையை நிறுத்தி இருக்கின்றன.

மற்ற நிறுவனங்களை விடவும் விசா, மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தி இருப்பது பெரும் சிக்கலை உருவாக்க கூடும். ஏனெனில், இதனால் ரஷ்யாவில் வினியோகம் செய்யப்பட்ட கார்டுகள் வேலை செய்யாது. அதேபோல ரஷ்யாவில் வினியோகம் செய்யப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. மேலும், மற்ற நாடுகளில் வழங்கப்பட்ட கார்டுகளும் ரஷ்யாவில் வேலை செய்யாது என இரு நிறுவனங்களும் அறிவித்திருக்கின்றன.

தவிர பார்முலா ஒன், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவின் முக்கியமான வருமானம் ஆயில் அண்ட் கேஸ் பிரிவுதான். ஆனால் இந்த பிரிவிலும் பல நிறுவனங்கள் வெளியேறி இருக்கின்றன. எக்ஸான் மொபில் சில பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் நிறுவனங்கள் வெளியேறுவதை நினைத்து ரஷ்யா கவலைப்பட்டதுபோல தெரியவில்லை.

ரஷ்யாவில் இருக்கலாம், ரஷ்யாவில் இருந்து முழுமையாக வெளியேறலாம் அல்லது உள்நாட்டு பங்குதாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு இப்போதைக்கு வெளியேறலாம் என ரஷ்யா தெரிவித்திருக்கிறது. நிறுவனங்கள் வெளியேறுவதால் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் ரஷ்யாவுக்கும் இழப்புதான்.



நிறுவனங்கள் வெளியேறியது மட்டுமல்லாமல் சில நிறுவனங்கள் உக்ரைனில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதாகவும் அறிவித்துள்ளன. இதுதவிரவும் சிறிதும் பெரிதுமாய பல நிறுவனங்கள் வெளியேறி இருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com