உக்ரைனில் போர் முனையில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஆஷாவுடன் தஞ்சையில் உள்ள அவரது தந்தை பரமராஜ் தொலைபேசி வாயிலாக பேச புதிய தலைமுறை ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இருவரும் உருக்கமாக உரையாடியதை சுருக்கமாகப் பார்க்கலாம்.
தந்தையிடம் பேசிய மாணவி, ’’நாங்கள் 5 நாட்களாக பதுங்கு குழியில்தான் பதுங்கியுள்ளோம். நிலநடுக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு உள்ளது. இதுபோன்ற சம்பவம் எதுவும் இதற்கு முன்னர் இங்கு நடக்கவில்லை. இங்கிருந்து ருமேனியா 1.300 கி.மீ தொலைவில் இருக்கிறது. நான் இருக்கும் இடத்திலிருந்து ருமேனியாவிற்கு செல்ல 18 மணிநேரம் ஆகும். ரயிலில் பெண்கள் எல்லைவரை செல்ல அனுமதியில்லை. பேருந்தில்தான் செல்ல முடியும்’’ என்று கூறியுள்ளார்.
அதற்கு அவரது தந்தை நீ பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் கவலை என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.