"மூன்றாம் உலகப் போர் மிகுந்த அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் சூழலில், ரஷ்யாவின் இவ்வாறு கூறியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரஷ்யாவுடன் உக்ரைனை பேச்சுவார்த்தை நடத்த விடாமல் அமெரிக்கா தடுத்து வருகிறது. ரஷ்யா பல நாடுகளுடன் நட்புடன் உள்ளது; நாங்கள் தனித்து விடப்படவில்லை. உக்ரைன் பிற நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை, மூன்றாம் உலகப்போர் மூண்டால் அது மிகுந்த அழிவை ஏற்படுத்தும். மூன்றாம் உலகப் போரின் போது அணுசக்தியால் ஏற்படும் அழிவு மிகவும் மோசமானதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F1365930840522307%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>