உக்ரைன் தலைநகரிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனில் கடந்த நாட்களாக ரஷ்ய ராணுவம் ஏவுகணை மற்றும் குண்டுகள்வீசி தாக்குதல் நடத்திவந்தது. இந்நிலையில் தாக்கத்தின் தீவிரத்தை ரஷ்ய ராணுவம் சற்று குறைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது. மேலும் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-இல் உள்ள மக்கள் சுந்ததிரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டதுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ரஷ்ய ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யை இடையிலான பேச்சுவார்த்தை பெலாரசில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கவுள்ளது.